உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

(121

தெரியவாராது. பெண்கள் ஒரு சமயமும், ஆண்கள் மற்றொரு சமயமும் வாய் பேசாது உலவுவதை அவர் கண்டார். அவர்களைச் சுட்டிக்காட்டி, "இவர்கள் யார்?" என்று கேட்டார்.

"ஒளியலை பற்றி ஆராய நேரமில்லாத பைத்தியக்காரர்கள் இவர்கள் தான்," என்றார் ஐன்ஸ்டீன்.

ஒரே வாசகத்தில் பேராசிரியர் பிராங்கின் கேள்விக்குப் பதிலும் இருந்தது. ஐன்ஸ்டீன் உள்ளத்தில் தோய்ந்து நினைந்து கிடந்த ஆராய்ச்சியின் ஒளியும் அதனூடாகக் கனிவுற்றது.

ஜூரிச் பல்கலைக் கூட அழைப்பு

பெர்ன் பதிவுரிமைநிலையப் பணிக்குப்பின், ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய அளவில் ஒத்துப்போன இடம் பிரேக் தான் என்று கூறலாம். ஆனால், அவர் மனைவிக்கு பிரேக் ஒரு சிறிதும் ஒத்துக் கொள்ளவில்லை. இது வியப்புக்குரிய தன்று. ஏனெனில், ஐன்ஸ்டீனுக்குப் பல்கலைக் கழகத்தில் கிட்டிய சமுதாயச் சூழல் அம் மாதராருக்கு நகரில் கிட்ட வில்லை. தவிர இரண்டு னங்களாக வாழ்ந்த அந்த உலகத்தில், கணவரின் பதவிமூலம் அவர் ஜெர்மன் இனக்கோட்டைக்குள் அடைபட் ட்டிருந்தார். அதே சமயம் ஸ்லாவிய இனத்தவரான அவர் ஜெர்மானியருக்கு அயலாராகவுமிருந்தார். அவர் இனத்தவருடன் அவர் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

1912-ல் ஐன்ஸ்டீன் பயின்ற ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடம் அவரைப் பேராசிரியராகவே அழைத்தது. ஐன்ஸ்டீன் அதை ஏற்பதில் சிறிது தயக்கம் காட்டி வந்தார். ஆனால், திருமதி ஐன்ஸ்டீன் பிரேகை விட்டுப் போகத் துடித்தார். ஜூரிச் என்றதும் அவர் துள்ளிக் குதித்தார்.

அவர் முடிவே ஐன்ஸ்டீன் முடிவாயிற்று.

நுழைவுத் தேர்வுக்கு ஒருகாலத்தில் இடம் அளிக்காத நிலை யத்தில், பேராசிரியராகவே அவர் ப்போது மீட்டும் நுழைந்தார்.

அறிவியல் உலகில் ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடத்தின் மதிப்புப் பல்கலைக் கழகங்களின் மதிப்பைவிட உயர்ந்ததா யிருந்தது. உண்மையில் ஜூரிச் பல்கலைக் கழகம் அதனருகே ஒரு