உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

133

ஐன்ஸ்டீன் சட்டென எழுந்து வந்து திருமதி பிராங்கிற்கு ஈரலை வேகவைக்கும் முறையை அறிவியலடிப் படையிலே விளக்கினார்.

"தண்ணீரின் கொதிநிலை வெப்பம் குறைவானது என்பது உங்களுக்குத் தெரியாதா? உயர்ந்த கொதிநிலை வெப்பம் உடைய வெண்ணெய், நெய் போன்றவற்றிலிட்டே அதை வேகவைக்க முடியும்” என்று அவர் திருமதி பிராங்குக்குச் சமையற்கலை விளக்கம் தந்தார்!

பிரேகில் அறிவியல் வளர்ச்சிக்காக ‘யூரேனியாக் கழகம்’14 என்ற நிலையம் நிறுவப்பட்டிருந்தது. அதன் சார்பில் ஐன்ஸ்டீன் 'அண்டவெளியின் வளைந்த இயல்பு15 என்ற தம் கோட்பாட்டை

விளக்கிப் பேசினார்.

அணுகுண்டின் மூலவிதை

பிரேகில் நடந்த ஒரு செயல் பின்னாட்களில் பெரு முக்கி யத்துவம் உடையதாய் அமைந்தது. ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளில் அடிப்படையான முக்கியத்துவம் உடைய ஒரு வாய்பாடு உண்டு. அது ஆற்றலின் அளவைப்பற்றியது. ஒளிவேகத் தின் தற்பெருக்க எண்ணையும், எடைமானத்தையும் பெருக்கிய அளவே ஆற்றல் என்பது அவ் வாய்பாடு. ஆற்றலை நாம் 'ஆ' என்றும் ஒளிவிசையை 'ஓ' என்றும் எடைமானத்தை 'எ' என்றும் குறித்தால், அது

ஆ=எ ஒ2

என்ற உருவில்" எளிய வாய்பாடாகக் காட்சி தரும்.

இவ்வாய்பாட்டைஅடிப்படையாகக்கொண்டால் அணுவில் அடங்கிய ஆற்றல் அளவற்றதாகும். அம் முறையில் பேராற்றல் வாய்ந்த அழிவுப் பொறிகளைச் செய்யப் பலர் முயன்றனர்.பலர் அவற்றை அவ்வப்போது அவரிடமே கொண்டுவந்து காட்டி அவர் ஆதரவு பெற விரும்பியதுண்டு. இம் முயற்சிகளின் நோக்கத்தையே ஐன்ஸ்டீன் வெறுத்தார். அவற்றிலீடு பட்டவர் அறிவு நிலையையும் அவர் பொருட்படுத்த வில்லை. அவர்களை வெறியர் என்றே மதித்து வெறுத்தொதுக்கினார்.

பிரேகைவிட்டுப் புறப்படும் சமயத்தில் அவர் தங்கிய இடமறிந்து அவரைக் காணப் பலர் அருமுயற்சி செய்தனர். இவர்களில் அணுஆற்றல் பொறி அமைத்த இளைஞரும் ஒருவர்.