உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

அப்பாத்துரையம் - 7

பேராசிரியர் பிராங்கிடம் இளைஞர் தம் உரிமையை வற்புறுத்தினார்."இத்தகைய தறுவாய்க்காக ஆண்டுக் கணக்காகக் காத்திருக்கிறேன். அணு ஆற்றலுக்கு வழி வகுத்த பேரறிஞரை நான் கண்டுதானாக வேண்டும்," என்றான் இளைஞன்.

அவரைக் கண்டபோதும் இளைஞர் முழு விளக்கமும் விரைந்து சொல்லப் படபடத்தார். ஐன்ஸ்டீன் என்று மில்லா வெறுப்புடன் பேசினார். "தம்பி, இவ்வளவு கடு முயற்சி தேவை யில்லை; விரிவுரை வேண்டியதில்லை; ஒரு சொல்லே போதும், இந்த அறிவற்ற முயற்சி பயன்படா தென்பதற்கு. என்னிடமிருந்து இதுபற்றி வேறு எதுவும் அறிவதற்கில்லை. இந்தப் பொறி உருப் படியாக வேலை செய்யாது!” என்றுகூறி அகன்றார்.

பொறி உருப்படியாக வேலைசெய்தது, ஆனால் அழிவுத் துறையிலேயே வேலைசெய்தது.

25 ஆண்டுகளுக்குள் அந்தப் பொறியே அணுகுண்டாக வளர்ந்து, ஹிரோஷிமா நகரத்தை அழித்தது என்று அறிகிறோம். அதுவே அணு ஊழியை ஆரவாரமாகத் தொடக்கிவைத்த அணு குண்டு.

ஆஸ்டிரியா வருகை

பிரேகிலிருந்து ஐன்ஸ்டீன் ஆஸ்டிரியா சென்றார். அங்கே அவர் பழைய நண்பர் ஆட்லர் புரட்சி வெறிக்கு ஆளாகி, ஓரமைச்சரைச் சுட்டுக்கொன்று, அதன் பயனாக வாழ்நாள் முழுதும் சிறைப்பட்டிருந்தார். சிறையிலிருந்தே தொடர்புறவுக் கோட்பாட்டை எதிர்த்து அவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையும் எழுதியனுப்பினாராம்.

ஐன்ஸ்டீன் அவர் கோட்பாட்டுக்காக வருந்தவில்லை. உயர் குறிக்கோளும் பண்பும் வாய்ந்த இளைஞர் அரசியல் காரணங் களால் இந்நிலைக்கு ஆளாக நேர்ந்ததே என்று மட்டும் வருந்தினார்.

ஜெர்மனியில் யூத எதிர்ப்பு ஒரு புதிய அரசியல் கோட்பாடாக வளர்ந்து வருவதை முதன்முதல் மோப்பம் பிடித்தவர் ஐன்ஸ்டீனேயாவர். இந்த வளர்ச்சியே ஹிட்லரின் நாசிசமாக உருவெடுத்தது. வரப்போகும் இந்த இடர் பற்றி ஐன்ஸ்டீன் பிரேகில் தம் நண்பர்களுக்கு எச்சரிக்கை தந்திருந்தார்.