உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

165

நிலவுலகம் சுற்றும் திசையில் ஒரு முகக்கண்ணாடியும் அத்திசைக்கு நேர் குறுக்காக இன்னொரு முகக்கண்ணாடியும் இருக்கும்படி மேடை அடைக்கப்பட்டது.

நீரை எதிர்த்துச் செல்லும் படகைவிட, குறுக்கே செல்லும் படகு விரைந்து செல்லுமல்லவா? நிலவுலகம் சுற்றுந் திசையில் ஓடிய கதிர் விசும் போட்டத்தை எதிர்த்தும், மற்றது அதன் குறுக்காகவும் செல்வதால், முன்னதை விடப் பின்னது நுண்ணோக்காடியில் விரைந்து முன் கூட்டியே வந்து விழவேண்டும். இதுவே மைக்கேல்சன் மார்லி ஆகியோர் எதிர்பார்த்தது.

அளவைகள் நுண்ணிழை

பிறழாவண்ணம்

அமைந்திருந்தன. ஆயினும் இரண்டு கதிர்களிடையேயும் சிறிது வேற்றுமைகூட எழவில்லை!

‘விசும்’பின் விளக்கம் புதிர்மேல் புதிராயிற்று.

எச்.ஏ.லாரன்ஸ் என்பார் மைக்கேல்ஸன் கண்ட புதிருக்கு ஒரு விளக்கம் தந்தார். இயங்கும் பொருள்களில் இயங்கும் திசைநோக்கிப் பொருள்கள் குறுகும் என்றும், அதற்குக் குறுக்கான திசையில் அவை விரியும் என்றும் அவர் கூறினார். இந்நீட்டம், குறுக்கல்களைக் கணிக்கும் வாய்பாட்டையும் அவர் வகுத்து வெளியிட்டார். விசும்போட்டத்தை எதிர்த்தும், குறுக்காகவும் ஏற்பட வேண்டிய வேற்றுமை ஏன் ஏற்படவில்லை என்பதை இது விளக்கிற்று.

ஆனால் விசும்பு பற்றிய புதிர் இன்னும் விளக்கம் பெறவில்லை.

மைக்கேல்சன் - மார்லி முடிபிலிருந்தும், லாரன்ஸ் முடிபி லிருந்தும் ஐன்ஸ்டீன் இயற்கை பற்றிய தம் புரட்சிகரமான விளக்கத்தைத் தொடங்கினார்.

ஐன்ஸ்டீன் கோட்பாடுகளின் கருமூலம்

ஒளி நொடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் அல்லது 1,86,284 கல் தொலை வேகத்தில் செல்கிறது என்று அறிவியல் அறிஞர் கணித் துள்ளனர். அது நில உலகின் இயக்கவேகத்தால்