166
அப்பாத்துரையம் - 7
மாறுபடவில்லை என்ற மைக்கேல்சன் - மார்லியின் ஆராய்ச்சி காட்டிற்று. இதிலிருந்து அவர் தம் பாரிய விளக்கத்தை உருவாக்கினார்.
புதிரை விளக்கவந்த புதிரான விசும்பை ஐன்ஸ்டீன் ஒழித்துக் கட்டினார். அதனினும் சிறந்த விளக்கமாக லாரன்ஸ் குறுக்கத்தை அவர் கையாண்டார். ஆனால், அவ்விளக்கம் லாரன்ஸூம் வியக்கத் தக்க வகையில் அமைந்தது.
ஒளி மட்டுமன்றி, இயற்கையின் எல்லா இயக்கங்களுமே எங்கும் ஒரே நிலையில் ஓரே வகையில்தான் நடைபெறு கின்றன. ஆனால், இயங்கு தளங்களின்" தொடர்பால் அவை மாறுபாட்டை கின்றன. இம்மாறுபாடுகளை லாரான்ஸ் வாய்பாடு விளக்குகிறது.
நீளம், அகலம், உயரம் என்ற மூன்று இட அளவைகள் மட்டும் லாரன்ஸ் வாய்பாட்டால் மாறுபடுவதாக ஐன்ஸ்டீன் கொள்ளவில்லை. காலமும் அதே வகையில் மாறுபடும் என்று அவர் துணிந்துரைத்தார். இது மைக்கேல்சன் மார்லி தேர்வாராய்ச்சி களின் முடிவை முழுவதும் இயல்பாக விளக்கிற்று. அத்துடன் 'விசும்’பின் கருத்தாட்சியையும் அது முற்றிலும் ஒழித்தது.
ஐன்ஸ்டீன் கண்ட தத்துவமே அவர் தொடர்புறவுக் கோட்பாட்டின் அடிப்படை. அதன் சிறு திறவிளக்கத்தை அது மேலும் விளக்கிற்று. பெருந்திற விளக்கத்துக்கும் அது அடிகோலிற்று.
இயங்குதளங்களால் நீளம், அகலம், உயரம் ஆகிய எல்லா அளவைகளும் மாறுபடுவதை லாரன்ஸ் காட்டினார். ஆனால், ஒளிவேகம் மட்டும் மாறுபடாதிருப்பானேன்? இதை லாரன்ஸ் விளக்காது விட்டிருந்தார். ஐன்ஸ்டீன் விளக்கம் இதற்கு விடை கண்டது. நீளம், அகலம், உயரம், காலம் என்ற நான்களவைகளும் மாறுபடா ஒளி வேகம், மாறுபடும் இயக்கத் தளத்தின் இயக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அளவைகளே. ஆகவே, அந்த மாறா மூல அளவைக்கியைய அவை யாவும் மாறுவதால், மூல அளவை மாறாதிருக்கின்றது என்று ஐன்ஸ்டீன் காட்டினார்.