உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

அப்பாத்துரையம் - 7

3. வேகம் அல்லது ஆற்றல் ஒரு பண்பு,20 பொருள் மற்றொரு பண்பு அன்று. இரண்டும் ஒன்று என்று ஐன்ஸ்டீன் காட்டினார். அத்துடன் ரண்டின் தொடர்பையும் 'ஆற்றல் = எடைமானம் X ஒளிவேகத்தின் தற்பெருக்கம்'21 என்று அவர் காட்டினார். இவ்வாய் பாடு அணுக்குண்டு காண உதவியாயிருந்தது; அணு ஊழியையும் தொடங்கி வைத்தது.

4. ஒளிவேகம் வேகத்தின் எல்லை மட்டுமன்று. பருமன், எடை மானம் ஆகியவற்றின் எல்லையும் அதுவே. ஏனெனில், ஒளிவேகம் மிகுந்தோறும் எடைமானம் மிகுவதால், உச்சவேகமே உச்ச எடைமானம் ஆகும். ஒளி வேகம் வேகத்தின் எல்லையாத லால், எடைமானத்தின் எல்லையும் அதுவே. வேகம் குறையுந்தோறும் பருமன் பெருகுகிறது. வேகத்தின் குறைந்த எல்லை ஒளிவேகத்தின் குறைந்த எல்லையே. ஆகவே பருமன் எல்லையும், ஒளிவேக எல்லையாகவே அமைகிறது.

இயற்கை எல்லையற்றது என்று ஐன்ஸ்டீன் காலம் வரை மக்களும், கவிஞரும், அறிஞரும் கருதிவந்தனர். எல்லையற்றது என்பதற்கு ஐன்ஸ்டீன் ஒளிவேகம் என்ற பாரிய எல்லையை ஒப்பாக்கினார். இது பொருளின் எல்லை மட்டுமல்ல, பொருளுலகின் எல்லை! அதாவது அண்டங்கள் அடங்கிய இயற்கையின் எல்லை ஆகும்.

5. இயற்கை எல்லையற்றது மட்டுமல்ல, வடிவமற்றது என்றும் யாவரும் இதுவரை எண்ணி வந்துள்ளனர். இதில் வியப்புக்கிட மில்லை. ஏனெனில், எல்லையற்ற பொருளுக்கு வடிவமும் இருக்க முடியாது. ஆனால், ஐன்ஸ்டீன் இயற்கைக்கு எல்லை தந்ததனால், அதற்கு வடிவமும் உருவமும் காணமுடிந்தது.

யூக்லிட் காலமுதல் இரண்டு இடங்களின் மிகக் குறுகிய இடைவெளி அவற்றிடையேயுள்ள நேர்வரை என்றே எல்லாரும் கருதி வந்திருக்கிறோம். சிறிய அளவைகளில் இது அனுபவத்துக்கு ஒத்ததே. ஆனால், ஒரு நேர்வரையை நீட்டிக்கொண்டே போனால், அது உலகைச் சுற்றிக்கொண்டு புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்து விடும்! அப்போது அது நிலவுலகின் சுற்றளவான 24000 கல் தொலைவுக்கு மேற்பட்ட நீளமுள்ள ஒரு வட்டமாகி விடும். இந்த வட்டத்தின் ஒரு கூறினையே நிலவுலக மக்களாகிய நாம் நேர்வரை என்கிறோம். இயற்கையின் நேர்வரை