உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

169

இதுபோன்ற இன்னும் பாரிய ஒரு வட்டமே யாகும். ஒளியின் இயக்கமும், இயற்கையின் எல்லையும் இவ் வட்டமேயல்லாது வேறில்லை. ஆகவே இயற்கை வளைந்த, அதாவது உருண்டையான வடிவம் உடையது. அதன் இயக்கங்கள் எல்லாம் வளைந்த, வட்ட இயக்கங்களே.

6. பொருளும் ஆற்றலும் ஒன்றே என்ற தத்துவம் வகுத்ததுடன் ஐன்ஸ்டீன் அமையவில்லை. அதன் உதவியால் அவர் அணு ஆக்கம், அண்டத்தின் ஆக்கம் ஆகிய இரண்டையும் ஒரே இயற்கை அமைதியில் கொண்டு இணைக்கப் பாடுபட்டார்,. அதில் வெற்றியும் கண்டார்.

அணு உண்மையில் நடுவே ஒரு கருவுள்-2ளும், அதனைச் சூழ்ந்து சுற்றிவரும், எதிர் மின்னிகளும்23 உடையதே. கருவுளோ நேர் மின்னிகள்24திரளும் நொதுமின்னிகள்25 திரளும் சேர்ந்திணைந்தது. இவற்றுட்பட்ட நேர் மின்னிகளும் எதிர் மின்னிகளும் நொது மின்னிகளும் பொருட் கூறுகளல்ல; ஆற்றல்வெளி என்னும் அகல் களத்தில் நிகழும் இயக்கச் சுழிகளே" என்று ஐன்ஸ்டீன் கண்டார்.

ருவகை

அண்டங்களும் கோளங்களும் இயங்கும் அதே நியதியிலி லேயே மின்னி எதிர் மின்னிகளும் இயங்குகின்றன. அது மட்டு மன்று. மின்னி எதிர்மின்னி இயக்கங்களும் அண்டத்தின் இயக்கமும் ஒரே ஆற்றல் களத்தின் சுழி எதிர்ச்சுழிகளால் ஆக்கப் பெறுபவையே என்று ஐன்ஸ்டீன் கணித்துக்காட்டினார்.

ஐன்ஸ்டீனின் இந்த விளக்கமே 1949-இல் அவர் முற்றுவித்த ஒன்றுபட்ட களக் கோட்பாடாகும்.

28

7. ஐன்ஸ்டீன் தத்துவத்தால் ஏற்பட்ட மற்றொரு கருத்துப் புரட்சி நியூட்டன் காலத்திய நில ஈர்ப்புக் கோட்பாடு,27 பொருள் ஈர்ப்புக் கோட்பாடு ஆகிய இரண்டும் அடிபட்டுப் போனதேயாகும். இயக்கத்தின் ஆற்றலே அதன் எடைமானமாதலால், ஈர்ப்பாற்றல் அதன் எதிர் ஆற்றலேயாகும் என்பது ஐன்ஸ்டீன் கருத்து. இதை அவர் காட்சியளலையாலும்,9 கணிப்பளவையாலும்30 காட்டினார்.

ஒடும் வண்டியில் நிற்பவரும் உண்மையில் ஒட்டத்தில் பங்கு கொள்பவரே.வண்டி திடுமென நின்றால், அவர் உடலின் ஒட்டம்