188
அப்பாத்துரையம் – 7
அவர்கள் அதை வெளிக்காட்டத் துணியவில்லை என்பதை யும் உணர்ந்தேன். ஆசிரியர்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்தனரேயன்றி வாய் திறக்கவில்லை.
ஓர் ஆசிரியர் மற்றோர் ஆசிரியரின் காதண்டை திரும்பி மெல்ல முணுமுணுத்தார். என் கூரிய செவிப்புலனுக்கு அவர் கூறியது ஓரளவு நன்றாகக் கேட்டது. அதில் பிராக்கிள் ஹர்ஸ்ட் என்ற பெயர் இரண்டு மூன்று தடவை அடிப்பட்டது. “புதிய பெண் வந்த நாளாகப் பார்த்து இந்தக் கொடுமையா?” என்ற அவர் வாய்ச் சொற்கள் என்னை இதில் எவ்வகையிலோ தொடர்பு படுத்தியது.
ஆசிரியர்கள் உணவை அரைகுறையாகத்தான் உட் கொண்டார்கள். பெண்கள் கூடக் கண்களில் கண்ணீரைக் கசக்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு விழுங்கியும், உணவுத் தட்டை வெறுந்தட்டாக்க முடியாமலும் திணறினர். நானோ ஒரு துண்டுகூடத் தொடவில்லை.
மீண்டும் வகுப்பறையில் சென்று உட்கார்ந்த போது பாடத்தைவிடப் பசியையே அனைவரும் நினைத்திருக்க வேண்டும். ஆனால், எவ்வகையிலோ பசி முற்றிலும் காதை யடைத்தது. வகுப்பில் என்ன நடக்கிறது என்பதையே நான் கவனிக்க முடியாதவளானேன்.
என்னை முதலில் வரவேற்று மாது இப்போது ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்தார். அவர் வந்ததும் எல்லாரும் எழுந்து நின்று வணங்கினர். அவர்தாம் பள்ளியின் தலைமையாசிரிய ரான செல்வி டெம்பிள் என்று நான் இப்போது அறிந்தேன். அவர் எல்லா வகுப்புப் பிள்ளைகளையும் ஒருங்கே அழைத்து, "பிள்ளைகளே! இன்று நீங்கள் உண்ட உணவு உண்ணத் தகாதது. உங்களில் பலர்இன்னும் பசியுடனேதான் இருப்பீர்கள். ஆகவே,
ன்று பிற்பகல் வரை பாடம் வேண்டாம். அத்துடன் தற் காலிகமாக, உங்களுக்குப் புரையப்பமும், பச்சை வெண்ணெ யும் தரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை உண்டு, அடுத்த உணவுவேளை வரை இளைப்பாறி இருங்கள்,” என்றார்.
பிள்ளைகள் அனைவர் முகத்திலும் செத்த உயிர் பிழைத்தது போன்ற எக்களிப்பு ஏற்பட்டது. அதைக் கூட