ஜேன் அயர்
[189
ஆரவாரத்தில் காட்டாமல், துள்ளிக்குதித்து அவர்கள் உணவகம் சென்றனர். உணவு முடிந்தபின் அவரவர் போக்கில் தோட்டத்தில் விளையாடச் சென்றனர்.
என் வாழ்விடமாய் அமைந்துவிட்ட இந்தப் பள்ளியைப் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. ஆகவே, பள்ளியின் ஒருபுறம் தொங்க விடப்பட்டிருந்த நீண்ட பலகையை நான் உற்றுக் கவனித்தேன். அதில் “லோவுட் நிலையம்” என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே, சற்றுச் சிறிதாக, ஆனால், பெரிய எழுத்தைவிட விளக்கமாகத் தெரியும்படி தடித்த கெட்டி எழுத்தில் “இப்பகுதி திரு. நவமி பிராக்கிள் ஹர்ஸ்டின் வள்ளன்மையால் நிறுவப்பட்டது” என்று செதுக்கப்பட்டிருந்தது.
பள்ளி என்ற பெயர்தான் எனக்கு இதுவரை தெரியும். பள்ளிக்கு வருவதாகத்தான் எண்ணி வந்தேன். ஆனால் இங்கே பள்ளி என்ற பெயரினிடமாக ‘நிலையம்' என்ற பெயரைக் கண்டு, அதன் பொருள் என்னவாயிருக்குமோ என்று மலைத்தேன்.
நான் வந்த ஒரு நாளைக்குள் என்னிடம் எளிதாகத் தோழியாய் விட்ட பெண் ஹெலன் பர்னஸ் என்பவளே. அவள் கதவருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டி ருந்தாள். நான் அவளிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன்.
“ஹெலன்! இந்தக் பலகையில் என்ன எழுதப்பட்டிருக்
கிறது?"
"இது தெரியவில்லையா? 'லோவுட் நிலையம்' என்று எழுதப்பட்டிருக்கிறது.”
66
‘அது தெரியாமலா கேட்டேன்? எனக்கு நன்றாக வாசிக்கத் தெரியும். இந்தப் பெயர் எதைக் குறிக்கிறது?”
“ஏன்? இந்த இடத்தைத்தான்.”
66
இது பள்ளிதானே?
தை ஏன் நிலையம் என்று
குறித்திருக்கிறார்கள்?”
66
“அதுவா? சம்பளம் கொடுக்கும் பள்ளிக்கூடத்தைத் தான் பள்ளி என்று அழைப்பார்கள். அங்கே பிள்ளைகளுக்குப்