உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

அப்பாத்துரையம் 7

பெற்றோர் இருப்பார்கள். அவர்கள் சம்பளம் கொடுப்பார்கள். புத்தகம் முதலியவை வாங்கிக் கொடுப்பார்கள். பிள்ளைகள் வீட்டிலிருந்தே உடை முதலியவற்றுடன் வருவார்கள். விடுமுறை நாட்களில் தங்கள் வீடு செல்வார்கள். இது அப்படிப்பட்ட பள்ளி அன்று; அறச்சாலை! இங்கே படிக்க வருகிறவர்கள் தாய்தந்தை இல்லாதவர்கள் ஏன்? நீயும் அம்மாதிரி வருகிறவள் அல்லவா?”

"என் பெற்றோர் எனக்கு நினைவு வருவதற்கு முன்பே இறந்துபோனார்கள்.”

"இங்கே உள்ள பிள்ளைகள் எல்லாருமே கிட்டத்தட்ட அந்த நிலைமையில் உள்ளவர்கள்தாம்!”

நான் நீண்ட நேரம் வாய்மூடி இருந்தேன். என் உள்ளம் எங்கெல்லாமோ சென்றது. சிறிதுநேரம் சென்றதும் நான் மீண்டும் கேள்விகள் கேட்டேன்.

"இதில், திரு. நவமி பிராக்கின் ஹர்ஸ்ட் என்பவரின் வள்ளன்மைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறதே! அவர் யார்?" "இப்போது நிலையத்தை மேற்பார்த்துவரும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தை.”

பிராக்கிள் ஹர்ஸ்ட்

திரு. நல்லவர்தாமா?"

எப்படிப்பட்டவர்?

"அவர் ஒரு கோயில் காரியக்காரர்! நிறையப் பணம் உள்ளவர்”

"அவர் நிலையத்தை மேற்பார்ப்பானேன்? இல்லம் இல்லத் தலைவி செல்வி டெம்பிகளுக்கு உரியதல்லவா?”

"இல்லை; அப்படியிருந்தால் எவ்வளவோ நன்றா யிருக்குமே! செல்வி டெம்பிள் ஒவ்வொரு சிறு செய்தியிலும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிடுகிறபடி தான் செய்ய வேண்டியிருக்கிறது."

ஹெலன் நல்ல பெண். அவள் மற்றப்பெண்களைப் போல என்னை அசட்டையாகப் பார்த்து விட்டுப் போவ தில்லை. நான் கேட்பதற்கெல்லாம் பொறுமையாக அவள் மறுமொழி