உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் வருகை

நிலையத்தின் உணவு மிகவும் மட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், அத்தனை பெண்கள் உண்பதை யான் ஏன் உண்ணக் கூடாது என்று கருத்துட் கொண்டு மன அமைதியுடன் உண்டேன். கூடிய மட்டும் எல்லாப் பெண்களுடனும் இன்முகங்காட்டி நட்பாடவும் முயன்றேன். என் அமைந்த நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்குக் கூட நல்லெண்ணம் உண்டுபண்ணத் தக்கவையாயிருந்தன. ஆனால், திருமதி ரீட் அவளை அத்தை என்று கூற எனக்கு மனம் வரவில்லை. விதைத்த விதை தக்க நிலத்தில் இடம்பெற்று இதற்குள் முளைவிடத் தொடங்கிற்று.

திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் அடுத்த நாள் பள்ளியைப் பார்வையிட வந்தார். என்னை அவர் எளிதில் பார்க்காதபடிநான் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் என் பக்கத்திலேயே இருந்தார். செல்வி டெம்பிளிடம் அவர் பேசியது முழுவதையும் என்னால் கேட்க முடிந்தது. அவர் உள்ளம் நான் எதிர்பார்த்ததைவிட மிகுதியாகத் திருமதி ரீட் உள்ளத்தின் வண்ணம் செறிந்ததாயிருக்கக் கண்டேன். ஆனால், அதே உரையாடல் செல்வி டெம்பிளின் உயர் பண்பையும் காட்டிற்று.

பிராக்கிள் ஹர்ஸ்ட்:பிள்ளைகள் செய்யும் வேலை வரவர நன்றாயில்லை. அவர்கள் துன்னும் துணிமணிகள் உயர் குடும்பப் பெண்கள் அணியத்தக்கவையாயில்லை. இனிமேல் திருத்தமாக வேலை பயிற்றுவிக்க வேண்டும்.

டெம்பிள்: அப்படியே செய்கிறேன்.

பிராக்கிள் ஹர்ஸ்ட்: இவ்வாரம் சில பெண்களுக்கு இரண்டு தடவை வெள்ளாடை கொடுத்தாக அறிகிறேன்.