194
அப்பாத்துரையம்-7
திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் கண்கள் இப்போது பெண்கள் பக்கம் திரும்பின. ஒரு பெண் முகந்திருப்பி யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கண்கள் அப்பெண்ணின் பக்கமாக ஊன்றி நோக்கின. பேசியதற்காக அந்தப் பெண்ணுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று நான் கவலை கொண்டேன். ஆனால், அவர் கவனத்தை ஈர்த்தது பெண்ணின் பேச்சன்று. அப்பெண்ணின் அழகிய மயிர்ச் சுருள்களே.
“செல்வி டெம்பிள்! அந்தப் பெண்ணின் தலையைப் பார்! அதற்கு ஏன் அத்தனை அழகான சுருள்? இது என்ன அழகு மடமா? அறநிலையமல்லவா?” என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கேட்டார்.
செல்வி டெம்பிள் அவள் முன்னிலையில் இராவிட்டால் சிரித்திருப்பாள். அதை உள்ளூர அடக்கிக் கொண்டு, “அது சுருள் வைத்துச் சுருட்டியதன்று, ஐயனே! இயற்கையானது,” என்றாள்.
"இயற்கைக் கூட இப்படி அறநிலையங்களில் எப்படி விளையாடலாம்? எங்கே மற்றப் பெண்களின் தலையையும் பார்க்கட்டும்; எல்லாரையும் சுவரைப் பார்த்து நிற்கச் சொல்லுங்கள்." என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிட்டார்.
பாவம்! செல்வி டெம்பிள் எல்லாவகைக் கட்டளை களையும் அப்படியே நடத்தித் தீரவேண்டியவள், பெண்கள் அனைவரும் சுவரைப் பார்த்து வரிசையாக நிற்கும்படி கட்டளையிட்டாள்.
கட்டளையின் பொருள் இன்னதென்று விளங்காமல் பெண்கள் சிறிது நேரம் விழித்தார்கள். கட்டளை இரண்டு தடவை திருப்பிக் கூறப்பட்டபின் தான் ஓரளவு அதைப் புரிந்து அவர்கள் திரும்பி நின்றார்கள். செல்வி டெம்பிளுடன் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பெண்களின் தலைமுடியழகைப் பார்த்து கொண்டே சென்று திரும்பவும் வந்து உட்கார்ந்தார்.
பெண்கள் முகங்கள் சுவரைப் பார்த்து நின்றதே நல்லதாயிற்று. அவற்றைத் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால், அவருக்கு நல்ல பாட மாயிருக்கும். ஏனென்றால், அவர்கள் செல்வி டெம்பிளைப்