உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

அப்பாத்துரையம் - 7

திரு.பிராக்கிள் ஹர்ஸ்டின் இந்தத் திண்டாட்டத்தி லிருந்து அவரை என் கவனக்குறைவு தப்ப வைத்து, அதில் என்னைச் சிக்கவைத்தது. அவர் புதல்வியரையே பார்த்துக் கொண்டிருந்த என் புத்தகங்களும் எழுதுகோலும் தொப் பெனப் பேரோசையுடன் கீழே விழுந்தன. எழுதுகோல் இரண்டாக முறிந்துவிட்டது.

திரு.பிராக்கிள் ஹர்ஸ்டின் கவனமும் கோபமும் என்மீது திரும்பின. நான் இன்னார் என்பதைக் கண்டு கொண்டதும் அவர் முகத்தில் பொய்ச்சிரிப்புத் தோன்றிற்று. விரைவில் சிரிப்புக் குறுநகையாகி, குறுநகை அச்சந்தரும் கடுமையாக மாற்றமுற்றது.

அவர் அறை மூலையிலிருந்த ஓர் உயர்ந்த நாற் காலியைச் செல்வி டெம்பிள் அருகே கொண்டுவரும்படி கட்டளை யிட்டார். அதன் மீது என்னை நிறுத்தும்படி செல்வி டெம்பிளுக்கு உத்தரவாயிற்று. நடுங்கிய கால் களுடன் நான் நாற்காலியில் ஏறி நின்றேன்.

66

'பெண்ணே! இந்தச் சிறு குழந்தையைப் பாருங்கள் வயதில் இது உங்கள் அனைவரையும் விடச் சிறுபெண்தான். பார்த்தால் கெட்ட பெண் என்று எவரும் எளிதில் நம்ப மாட்டார்கள்.ஆனால், இதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிறு சைத்தான். இதனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ, செய்யாதீர்கள். தனுடன் எச்சரிக்கை

யாய்ப் பழகுங்கள்.

66

ஆசிரியர்களுக்கும் கூறுகிறேன். தை நன்றாகக் கண்டித்துத் தண்டித்து வையுங்கள். இந்த ஒரு பெண்ணால் இங்குள்ள மற்றப் பெண்களும் கெட்டுவிடப்படாது."

“இந்தச் சிறு வயதுக்குள்ளேயே இது பொய் பேசுவதில் தேர்ந்திருக்கிறது. வஞ்சம், குறும்பு, பிடிமுரண்டு ஆகியவற்றுக்கு இப்பெண் இருப்பிடம்.

"இவ்வளவையும் நானாகக் கூறவில்லை. ஆதரவற்ற இந்தப் பெண்ணுக்கும் ஆதரவும் இடமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே வைத்திருந்த அன்புள்ளம் உடைய சீமாட்டி தான் இதைக் கூறினாள். நன்றிகெட்ட இந்தப் பெண்