198
அப்பாத்துரையம் 7
கூடச் சட்டை பண்ணாமல், என்னை வந்து கட்டிக் கொண்டாள் "யார் சொல்வதையும் நான் கேட்கப் போவதில்லை. நீ தங்கமான பெண், வருத்தப்படாத” என்று அவள் என்னைத் தேற்றினாள். அத்துடன் சூடான தேநீரும் அப்பமும் கொண்டு தந்து என்னை வறுபுறுத்தி உண்பித்தாள்.
என்னைப் போன்ற இச்சிறு உள்ளத்தின் இன அன்பு பெரிய மனிதர் எழுப்பிய வெறுப்புக் கோட்டையைச் சிதறடித்தது.
லோவுட் நிலையத்தின் வாழ்வில் ஹெலென் பர்ன்ஸின் தோழமை எனக்கு ஒரு விடிவெள்ளியாயிருந்தது. ஆனால், செல்வி டெம்பிளின் அருளுள்ளம் அவ்வாழ்வின் முழு ஞாயிறாக, முழுநிறை மதியாக விளங்கிற்று.
முன்னிரவிலேயே உணவுமேடையில் செல்வி டெம்பிள் என் உளநிலையை உன்னிப்பாகக் கவனித்து வந்தாள். காலையில் எல்லாருடனும் என்னைக் காணாது போகவே, அவள் என்னைத் தேடிவந்து துயிற்கூடத்தில் ஹெலன் பர்னஸுடன் என்னைக் கண்டாள்.நான் எதிர்ப்பார்த்தபடி அவள் என்னைக் கண்டிக்கவில்லை, "நீ நேற்று உணவு கொள்ளவில்லை. இரவெல்லாம் உறங்காமல் அழுதிருக்கிறாய் என்று முகம் தானே கூறுகிறது. அழுது அமையப் போவது எப்போது?" என்றாள்.
நான் மீட்டு மொருதடவை அழுது, “இனி நான் எப்படி அமையமுடியும்? எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று தான் முடிவுகட்டி விட்டார்களே; என்றேன்.
அவர் ஹெலென் பர்னஸைச் சுட்டிக் காட்டி, "இதோ பார்; இந்தப் பெண் முடிவு கட்டிவிடவில்லை. அத்துடன் நான் முடிவுகட்டி விட்டதாக நீ எண்ணுகிறாயா?” என்றாள்.
அந்தக் கேள்வி எனக்குப் பேரூக்கம் தந்தது. கரை காணாக் கடலில் மிதந்த எனக்கு அது ஒரு கலங்கரை விளக்கமாயிருந்தது.
66
உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி. அதற்கு நான் என்றும் கேடு வருவிக்கமாட்டேன்,” என்றேன்.
“என் நல்லெண்ணம் மட்டுமன்று, எல்லார் நல் லெண்ண முமே இனி உன்சொல், உன் செயல், உன் நடத்தையிலேயே