ஜேன் அயர்
199
இருக்கிறது. சரி; நேற்றுத் திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் கூறினாரே, அச்சீமாட்டியார் யார்? உன்னிடமிருந்தே உன் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறோம்," என்றாள் அவள்.
நான் என் அத்தை வீட்டுக்கு வர நேர்ந்த வரலாறு, அங்கே வாழ்ந்த வாழ்வு, லோவுட்டுக்கு வந்தது ஆகிய யாவும் கூறி முடித்தேன்.
னி
"நீ கூறியவை எல்லாவற்றிலும் உண்மையின் எடை இருக்கிறது.ஜேன்! உன் சொல்லைக் கொண்டே இனி யாவரும் உன்னை மதிப்போம். அதற்கு நான் பொறுப்பு.இனி நீ கவலையில்லாமல், உன் கடமைகளைச் சரிவரச் செய். முடியுமானால் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் மனங்கூட மாறும்படி செய்வோம். வா," என்று கூறிச் செல்வி டெம்பிள் என்னை அழைத்துச் சென்றாள்.
வள்ளல் எனப் பெயர் வாங்கிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தையைவிட, அவர் வள்ளன்மையைச் சாக்காகக் கொண்டு நிலையத்தில் தம் இரும்புப் பிடியை நிலைநாட்டிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் ஆட்சியை விட, செல்வி டெம்பிளின் வள்ளன்மையும் அன்பாட்சியுமே லோவுட்டை அன்னைபோல் வளர்த்தன என்பதை நான் கண்டு
கொண்டேன்.
எந்த
செல்வி டெம்பிள் தலைவியாயிருக்கும் நிலையத்திலும் நான் எத்தனை துன்பத்தையும் பெறத் தயங்காதவளாக இருந்தேன். அவள் அருள் உள்ளம், துன்பப்படுகிறவர் துன்பத்தையெல்லாம் தமதாக்கி அவர்கள் மீது இன்ப அமைதியாகிய நிலவைப் பொழிந்தது.