உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

233

இன்று என்னை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, என்னளவில் நான் உங்களை மனமார மன்னிக்கத் தடையில்லை. இனி, கடவுளிடம் மன்னிப்புக் கோருங்கள். அவரும் உங்களை மன்னிக்கும்படி நான் பணிவுடன் வேண்டுகிறேன்.” என்றேன்.

அவள் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் வருத்தத்தின் நிழலுருவுடன் போராடின. இறப்பவர் நல்லெண்ணத்தின் எழிலொளி நெற்றியில் படர்ந்தது. அவள் அமைதியுடன் கண்மூடினாள்.