உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. திருமண ஏற்பாடுகளும் பேச்சும்

நான் கேட்ஸ்ஹெட்டில் எப்படியோ இன்று, நாளை, இவ்வாரம், அடுத்த வாரம் என்று ஒரு மாதம் தங்க வேண்டியதாயிற்று. அதற்கிடையே எனக்குத் திருமதி ஃவேர் ஃவக்ஸிடமிருந்து கடிதம் வந்தது. அதில் திரு. ராச்செஸ்டர் லண்டன் சென்றிருப்பதாகவும், அவர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஒட்டியே போயிருப்பதாகவும் எழுதியி ருந்தாள். செல்வி பிளான்சியை அவர் திருமணம் செய்ய விரும்புவதாக முன்பே என்னிடம் கூறியிருந்ததால், பெண் யார் என்று அவளும் எனக்கு எழுதவில்லை. நானும் வேறு எண்ணத்தக்க தனிக்காரணம் இல்லாததால் அவ்வாறே நினைத்தேன். என் மனத்தில் அவரைப் பற்றிக் கொண்ட பாசமும் அவர் மீது சினத்தையும் என்மீது வெறுப்பையும் தூண்டின. ஆனால், இந்நிலை நீடித்திருக்கவில்லை. அவர் திருமணம் செய்தால் நான் தார்ன்ஹில்லை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற கவலைதான் எனக்கு இருந்தது.

ஒரு ரு மாதத்துக்குப் பின் நான் தார்ன்ஹில்லுக்குச் சென்றபோதும், ஒரு சிலநாள் தங்குவதற்குச் செல்வதாகத்தான் சென்றேன். ஆனால், என்னைக் கண்டதும் அடேல் குதித்த குதி அவளுக்கு என்னிடமிருந்த அளவுகடந்த விருப்பத்தைத் தெள்ளத் தெளியக் காட்டிற்று. தார்ன்ஹில்லில் வேலைக்காரர் எவரும் என்னை ஓர் அயலாளாகக் கருதவில்லை என்பதை அவர்கள் என்னை வரவேற்கும் ஆர்வத்தில் கண்டேன் திருமதி ஃவேர்ஃவக்ஸின் சுருக்கு விழுந்த முகம் கூடப் புன்முறுவலால் மலர்ந்தது. இத்தனை அன்பும் ஆர்வமும் கலந்த ஓர் இல்லத்தி லிருந்து திரு. ராச்செஸ்டரின் திருமணம் என்னைப் பிரிக்கிறதே என்று நான் அடிக்கடி எண்ணினேன்.