உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

கு

(241

"கதை இன்னும் முடியவில்லை. எனக்கு மெய்ம்மயிர் சிலிர்க்கவைக்கும் செய்தி இனித்தான் இருக்கிறது," என்று தொடங்கினேன்.

‘கதைதான் முடிந்துவிட்டதே! இனி என்ன?" என்றார்.

66

விழித்தெழுந்தபோது என் கண்முன் பின்னும் ஒளி தெரிந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். என் முன் யாரோ நின்றிருந்தாள். அது பணிப்பெண் சோஃவியோ, என்று ஐயுற்று 'சோஃவீ! சோஃவீ! என்று அலறினேன். மறுமொழி இல்லை. என்னை அச்சம் பிடித்தாட்டிற்று. ஏனெனில் அது சோஃவியுமன்று, திருமதி ஃவேர்ஃவக்ஸு மன்று; கிரேஸ்பூல்கூட அன்று," என்றேன்.

நான் சொல்லி முடிக்குமுன் அவர் 'ஆ' என்று வாய் விட்டு அலறிவிட்டார்; பின் சமாளித்துக் கொண்டு 'அப்புறம்' என்றார்.

66

அது பெண்ணுருவம்தான். அவள் நெட்டையாய் வலுவான எலும்புக் கட்டுடையவளாய் அடர்த்தியாகக் கறுத்துத் திரண்ட தலைமயிருடையவளாய் இருந்தாள்.”

"நீ முகத்தைப் பார்க்கவில்லையா? அது கிரேஸ் பூலாகவோ, அல்லது வேறு யாராகவோ அண்டை அயலி லுள்ளவர் களாவோதாம் இருக்க வேண்டும் நினைக்கிறேன்,” என்றார்.

என்று

"இல்லை. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தேன். அவள் கிரேஸ்பூலுமன்று. இங்கே அண்டை அயலிலுள்ள எவரு மல்லர். ஆயினும் அவள் இந்தவீட்டுக்குப் புதியவளாகவோ, என்னை அறியாதவளாகவோ இல்லை. ஏனெனில் அவள் என்னை ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்து விட்டுச் சட்டென என் மணமூடாக்கை எடுத்துக் கிழித்து எறிந்தாள். மண ஆடையைத் தீயிட்டுக் கொளுத்தினாள். அதன்பின் என்மீது பாய்ந்துவந்தாள். நான் அச்சத்தால் கண்ணை மூடினேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியாது. நான் திரும்பவும் எழுந்திருக்க நேரமாயிற்று," என்றேன்.

66

து முற்றிலும் கனவு என்பதில் ஐயமில்லை," என்றார்

அவர்.