உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

அப்பாத்துரையம் 7

"இல்லை. கிழிந்த முகமூடாக்கு. இதோ எரிக்கப்பட்ட மண ஆடையின் கரியினை நானே எழுந்தபின் கண்டேன். இது கனவுக் காட்சியன்று. இந்தப் பெண்ணும் ஆவியன்று; அவள் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,' என்றேன்.

"யாராயிருந்தாலும் நீ ஒரு பேரிடரிலிருந்து தப்பி யிருக்கிறாய் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இது முன் என்னையும் திரு. மேஸனையும் தாக்கிய அதே கிரேஸ்பூல்தான் என்பதில் ஐயமில்லை. அவளுக்கு அடிக்கடி அறிவு பேதலிப்ப துண்டு. இத்தகைய பெண்ணை வைத்துக் கொண்டிருப்பதனால் ஏற்படக் கூடும் இதுபோன்ற இடையூறுகளை நான் எண்ணாத வனல்லன். ஆனால் அவற்றையும் பொருட்படுத்தாமல் அவளை வைத்துக்கொண்டிருக்க வேண்டிய கட்டாய நிலைமையை நான் உனக்குப் பின்னால் விளக்குகிறேன். இனி உனக்கு எவ்வகை இடரும் வாராது. அச்சமில்லாமல், மணவினைக்கு ஒருங்கி மகிழ்வுடனிரு,” என்று கூறி என்னை அவர் ஆற்றுவித்தார்.

மணி ஏழடித்ததும் எனக்கு மண அணிபூட்டுவதற்கு சோஃவி என் அறைக்கு வந்தாள். அவளுக்கு மட்டுமே அப்போது செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்துக்குள் ராச்செஸ்டர் வந்து என்னை மிகவும் பரபரப்புடன் விரைவு படுத்தினார். சமய ஊர் முதல்வர் திரு. உட் எங்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அரைகுறை ஒப்பனையோடு என்னை இழுத்துச் சென்றார்.

கா

சென்ற வேகத்தில் கோயில் வாயில் அணுகுமுன் எனக்கு மூச்சுத் திணறிற்று. அவர் என்னைச் சற்றே ஓய்வு கொள்ள விட்டுப் பின்னும் இழுத்துச் சென்றார்.

கோவிலகத்தில் நாங்கள் நுழைந்தபோது ராச்செஸ்டரும் சோஃவியுமே ஊர்முதல்வர் முன் நின்றோம். ஆனால், வினைமுறை தொடங்குமுன் அயலார் இருவர் அங்கே நின்றதைக் கண்டேன்.

தொடக்க வினைகள் முடிந்தபின் முதல்வர் மண வினைக்கு முன் சட்டப்படி கேட்கப்படும் முக்கியமான கேள்வியைக் கேட்டார்.