உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

66

1243

இந்த இரண்டு இளந்துணைவர்களும் சட்டப்படி இணையும் வகையில் ஏதாவது தடங்கலுரைக்கு இடமுண்டு என்று இங்கே எவராவது கருதினால், அதை என்முன் வந்து தெரிவிக்கும்படி கோருகிறேன்,”என்றார்.

இது வழக்கமான நடைமுறை. ஆகவே, முதல்வர் எந்த மறுமொழியையும் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. முறைமைப்படி சிறிதுநேரம் வாளா இருந்து விட்டு, மேலே நடக்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தொடங்க இருந்தார். அதற்குள் முன்னிருந்து ஓர் உரத்த குரல் கிளம்பிற்று.

"சட்டப்படி இந்தத் திருமணம் நடைபெறக் கூடாது என்பதற்கான சரியான காரணம் ஒன்று இருக்கிறது,” என்பதே அக்குரல்.

இது கேட்ட அனைவரும் அதிர்ச்சியுற்றோம். சிறிது நேரம் அமைதி நிலவிற்று.

முதல்வர்தாம் முதலில் வாய்திறந்தார். "கூறவந்ததை முழுவதும் விளக்கிக் கூறுங்கள். இப்போது எழுந்த தடை நேர்மையானதா அல்லவா என்று அறியும்வரை நான் எந்த வினைமுறையும் தொடர்ந்து செய்ய முடியாது," என்றார்.

முன் குரலெழுப்பியவர் வந்திருந்த அயலாளர்களுள் ஒருவரே; அவரே மீண்டும் பேசினார்.

"இந்தத் திருமணம் சட்டப்படி நடைபெறமுடியாத ஒன்று. ஏனென்றால் திரு. ராச்செஸ்டருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடனிருக்கிறாள்?”

என் காதலரை நான் உற்று நோக்கினேன். அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார். அதை என் பக்கமாகத் திருப்பி உற்று நோக்கினேன். அது விளறி வெளுத்து விறைந்து விருவிருத்துப் போயிருந்தது.

அவர் கைகள் நடுங்கின. ஆனால் ஒரு கையால் என்னை இறுகப் பற்றிக் கொண்டே அவர் அயலானைப் பார்த்து, "நீ யாரப்பா! என்று கேட்டார்.

“நான் ஒரு வழக்குரைஞர். என் பெயர் பிரிக்ஸ்.”