244
அப்பாத்துரையம் 7
"நீர் அறிந்த சட்டப்படி எனக்கு இதற்கு முன்பு மண மாகியிருக்கிறதென்றா கூறுகிறீர்?"
"நண்பரே! உமக்கு இன்னும் உயிருடனே ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை மறைக்காதேயுங்கள்.”
“அப்படி நீர் கூற என்ன ஆதாரம்?”
"இதோ மணமுறியின் மெய்ப்படி:
'எட்வர்டு ஃரேர்ஃவெக்ஸ் ராச்செஸ்டர் - தார்ன்ஃவீல்டு இல்லம் ஜெமய்க்காவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலுள்ள பெர்ததா மேஸன் - இருவருக்கும் திருமணம் இன்று நடந்தேறியது.
66
'ஐந்தாண்டுகட்கு முன் தேதியிட்ட இந்த மணமுறிக்கு என்ன சொல்லுகிறீர்?
66
“சரி, இது மணம் நடந்ததற்குத்தானே சான்று, மணமகள் இன்னும் உயிருடனிருப்பதாக நீர் எப்படிக் கூற முடியும்?"
"இறந்ததற்கான சான்று கொடுக்க வேண்டியவர் நீர்தாம். ஏனென்றால், அவள் ஒரு வாரத்திற்கு முன் உயிருடனிருந்ததற் கான சான்றாளரை அழைத்து வந்திருக்கிறேன். இதோ அவரை முன்னிலைப் படுத்துகிறேன்.”
"திரு.மேஸன், அருள் கூர்ந்து இங்கே வாருங்கள்”
திரு. மேஸனின் பெயர் கேட்டதும் ராச்செஸ்டர் பற்களை நெறுநெறெனக் கடித்தார். கடுஞ்சீற்றத்தால் அவர் உடல் தளிரென நடுக்குற்றது. நானும் அப்பெயர் கேட்டுத் திடுக்கிட்டேன்.
மணவினை தடுத்தவர் திரு. மேஸனைப் பார்த்துக் கேள்வி
கேட்டார்.
“இந்த மனிதர் மனைவி உயிருடனிருக்கிறாள் என்பது உமக்குத் தெரியுமா?"
"ஆம், இந்தக் கணத்திலும் அவள் தார்ன்ஃவீல்டு இல்லத்தில் இருக்கிறாள். சென்ற ஏப்பிரல் இறுதியில் தான் நான் அங்கே அவளைக் கண்டேன்.”
“உமக்கு அவளை எப்படித் தெரியும்?”