260
அப்பாத்துரையம்-7
66
அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எங்கே? அது இப்போது இந்நிலையிலிருப்பானேன்?”
"ஏன்! வீடுதான் எரிந்து விட்டதே! நீ அங்கே யாரைப் பார்க்க விரும்பினாய்? நான் அங்கே வேலை பார்த்தவன்தான். பெயரைச் சொன்னால் தெரிவிக்கிறேன்.”
66
வீட்டின் தலைவர் திரு.ராச்செஸ்டர் என்ன ஆனார்? இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?"
'எட்வர்டு ராச்செஸ்டர் தாமே! அவர் இறந்திருந்தால் கூட அவருக்கு நன்றாகத்தானிருக்கும். எரிந்த வீட்டில் தீயின் வெப்புப்பட்டு அவர் கண் குருடாகிவிட்டது. அவர் இப்போது 30 கல் தொலைவிலுள்ள ஃவேர்ண்டீனில் ஒரு தோட்டப் பண்ணையில் சென்று மிகவும் துன்பத்துடன் காலங்கழிக்கிறார்."
அவர் நிலைகேட்டு நான் துடித்தேன். ஆனால், அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்தேன். அவரைத் தேடப் புறப்படுமுன் அவரைப் பற்றிய முழு விவரமும் அறிய விரும்பினேன். முதலில் நான் கேட்ட கேள்வி, 'திருமதி ராச்செஸ்டர் கூட இருக்கிறாளா?' என்பதே.
து
"இல்லை, இறந்துவிட்டாள். அந்தப் பைத்தியந்தான் வீட்டுக்குத் தீயை வைத்துவிட்டுத் தானும் அத்தீக்கு இரை யாயிற்று. பாவம், தீ தன்னை எரிக்கிறது என்பது தெரியாமல் அவள் தீ எரியும் அழகைப் பார்த்துத் தாளம் போட்டுக் கூத்தாடிக் கொண்டிருந்தாள். தீயைக் கடந்து அவளைக் காக்க எவரும் துணியவில்லை. ஆனால், திரு. ராச்செஸ்டர் தீயின் நடுவிலேயே குதித்தோடி அவளைக் காப்பாற்ற முயன்றார். அப்போதும் அவளுக்குச் சிறிது அறிவிருந்தால் அவள் காப்பாற்றப் பட்டிருப்பாள். அவள் தீயைவிட்டு வெளியே வரமறுத்தாள்; தன் உயிரைப் பாராது தன்னைக் காக்க வந்த கணவனுடன் அவள் போராடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு வெளியே வருமுன் அவள் உடல் முற்றிலும் தீக்காயங்களுக்கு இரையாய் விட்டது. விரைவில் அவள் உயிர் நீத்தாள். ஆனால், அவள் பிடிவாதம் அவள் உயிருடன் நில்லாமல் திரு. ராச்செஸ்டர் கண்களையும் குருடாக்கி விட்டது.” எதன்று அவன் முழு விளக்கமும் தந்தான்.