15. அமைதி
நான் ஃவேர்ண்டீன் சென்று சேரும்போது பொழுது சாய்ந்துவிட்டது. மழை சற்றே தூறிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் மங்கிய இருளினிடையே வீட்டின் சுவர்கள் மட்டும் வெள்ளை வெளேலென்று தெரிந்தது. அதன் வாசலில் ஓர் உருவம் நின்று கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்த்தது. அதன் நிலையிலிருந்து அது கண்பார்வை குன்றிய தென்று தெளிவாகத் தெரிந்தது. அதுதான் திரு. ராச்செஸ்டரா யிருக்க வேண்டும் என்று மதித்தேன்.
அவரைக் காண என் பெண் உள்ளம் ஒரு பாதி மலர்ந்தது. மறுபாதி அக்காட்சியைக் கண்டு வருந்திற்று. கண் தெரியாத அந்த நற்குணவாளனிடம் சென்று எப்படி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் என் கால்கள் பின்தங்கின. ஆனால், முதலில் நான் அவரைச் சந்திக்கும்போது உடனிருந்த நாய் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைச் சுற்றிவந்து வால் குழைத்தது. மனிதர் அறிவும் குணமும் மாறினாலும் அப்பண்புகள் மாறாத நாயினத்தின் உயர்வை எண்ணி வருந்தினேன்.
நாய் மூலம் யாரோ தெரிந்தவர் வந்து நிற்பதாக மட்டுமே அவர் அறிந்தார். அது தன் பணியாள் ஆன ஜான்ஸனின் மனைவி மேரியே என்று கருதி, “போய் விளக்கு ஏற்றி வைத்து விட்டுத் தேநீர் கொண்டுவா”, என்றார்.நான் இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி அருகிலுள்ள மேரியின் குடிசைக்குச் சென்றேன்.
மேரியும் ஜானும் என்னை அடையாளம் கண்டு மகிழ்ந்து வரவேற்றனர். நான் அவர்களை வண்டியிலிருந்து என் பெட்டி படுக்கையைக் கொண்டுவர அனுப்பிவிட்டுத், தேநீரும் விளக்கும்