உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பராபரங்கள்



எதுக்காக
நாம் வாழ்கிறோமோ—
வாழத் தவிக்கிறோமோ—
அது
என்றோ செத்து மண்ணாய்ப்போச்சு
என்று எவனோ சொன்னான்.
அது சரியே போலும்!

எதுக்காக
மனிதர் வாழ்கிறார்
வாழப் பொருதுறார்—
இதை
எவரும் அறிந்திலர்.
ஏனோ எப்படியோ
நாளோட்டுறார் பற்பலர்.
நாளோடுது, நாமிருக்கோம்
என இருக்கும்
பாரபரங்களும் பலபலரே!

1972

வல்லிக்கன்ணன்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/17&oldid=1896080" இலிருந்து மீள்விக்கப்பட்டது