பக்கம்:அமிர்தம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* தட்டு வட்டி க்குக் கிடைத்த சொக்கத்துடன் புறப்படும் அவன், மீண்டும் வீடு வரும் சமயம் இருட்டிப் போகும். பத்து, பன்னிாண்டு ரூபாய்க்கு அரிசி வாங்குவான். வீடு வந்ததும் அரிசி பூசாவும் காலியாகிவிடும். கண் முன்ன லேயே லாபம் மூன்று, நான்கு ரூபாய் சர்வ நிச்சயம் கிடைக்கும். ஆக இந்தத் , தொழில் பட்டப் பகவில் * கறுப்பு மார்க்கட் முத்திசையுடன்-நடந்தது.

காற்று என்றென்றும் ஒரே திக்கில்தான் வீசும் என் பது என்ன கிச்சயம் ? > * * - - -

அப்பொழுது சேஷன் ரொம்பவும் கெடுபிடி ‘யாக இருந்தது. அன்று வழக்கம்போல அரிசி மூட்டையைச் சுமிக்க முடியாமல் சுமந்து வருகையில், எதிரே சைக்கிளில் வந்து கின்ற ரேஷன் அதிகாரியைக் கண்ட மாணிக்கத் திற்கு சத்தம் முழுதும் அப்படியே உறைந்துவிட்டது போன்ற பிரமை எழுந்தது. அவருடன் வந்திறங்கிய அந்தச் செட்டியாாைக் கண்டதும், மாணிக்கத்திற்கு விஷ யம் விளங்கிவிட்டது. செட்டியாருக்கு அவன் மீது பல நாளாக ஒரு கண் உண்டு. அவர்தான் அவ்வூர் சேஷன் கடைக்காரர். பின்னர் கேட்பானேன்? ரகசியமாக அரிசி வியாபாரம் நடப்பது பற்றிய துப்பு’ அவர் வாயிலாக அதிகாரிகளுக்கு எட்டியது. அதன் பலன் மாணிக்கத் தின் தலையில் விடிந்தது. . .

மாணிக்கம் செய்த கள்ள வியாபாசம் கிரூபிக்கப்பட் டது. அதன் பல்கை அவனுக்கு ஒரு வருஷம் சிறைக் தண்டனை கிடைத்தது. கையுங் களவுமாக அவன் பிடி பட்ட தருணம், அந்தச் செட்டியாரைப் பார்த்தான். அப் பார்வையில்தான் எவ்வளவு கொடுரம், ஏக்கம், சஞ்சலம் பிரதிபலித்தது! ..

கணவன் கைதியாகிய சேதி அறிந்து புலம்பினுள் காவேரி, கைக்குழந்தையுடன் எப்படிக் காலந்தள்ள முடி யுமோ என்று எண்ணிப் பார்த்த அவளுக்கு ஆத்திசம் பொங்கியது; அழுகை பீறிட்டது. அன்றைக்குத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/21&oldid=616745" இருந்து மீள்விக்கப்பட்டது