பக்கம்:அமிர்தம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பலூன், சொட்டி எல்லாம் வாங்கி வருவாங்க. எங்கே சோற்றைச் சாப்பிடு’ என்று தாஜா செய்தவாறு மக ளுக்குச் சோற்றை ஊட்டினுள்.

சம்பாதிக்கவா அவள்.கணவன் போயிருக்கிருன் ? அவள் நெஞ்சம் எதிர்க் கேள்வி கேட்டது. பொய்யைக் கற்பித்து, குழந்தை உள்ளத்தை ஏமாற்றிவிட் டதை எண்ணி வருத்துவதைத் தவிர அவளுக்கு வேறு மார்க்கம் புலப்படவில்லை. காவேரியின் கண்கள் கலங்கின. “தெய்வமே ஒன்றும் தெரியாத மகளுக்கு கான் என்ன பதில் சொல்லுவேன்? எங்கள் கலி தீச மச்சான் விடுதலை கிடைத்துச் சிக்கிரம் வந்துவிடுமா? மாரியாத்தா! கட்டாயம் மாவிளக்குப் போடுறேன். தாயே...” என்றெல் லாம் வேண்டிக்கொண்டாள். *

உள்ளமும் உள்ளமும் பேசிக்கொண்டதின் பேரில், நாலு பேர் அறியக் காவேரியின் கழுத்தில் தாலியைக் கட்டினன் மாணிக்கம். வாழ்க்கை சுகமுடன் கடந்தது; ஏழ்மையில் இன்பம்! முள் ரோஜாவிலிருந்துதானே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சுகந்த மணம் எழுகின்றது!

காலச்சக்கரம் சுழன்றது. காவேரியும் மாணிக்கமும் ஆக இருந்த குடும்பத்தில் மூன்றாம் நபர் ஒன்றும் அங்கீ காசம் பெற்றது. கோதையின் ஜனனம் தம்பதிகள் வயிற் றில் பால் வார்த்தது. என்றாலும் அடுத்த வருவுமே அப் படிப்பட்ட எதிர்பாாாத விளைவு நேரிடுமென்று யாரும் கினைக்கவில்லை. . . . . . . . மூன்று பேர்களுக்கு வகை ச்ொல்லி நாளே لنستاهع வேண்டியது மாணிக்கத்தின் பொறுப்பல்லவா ? அதற் காகவே அம்முயற்சியிலும் ஈடுபட்டான். அங்கிருந்து பதி னேந்து மைல் தொலைவிலிருந்து ரகசியமாக அரிசி வாங்கிச் சுமந்து லாபத்திற்கு விற்று ஜீவனம் நடத்தினர். சிலர். அவர்களில் மாணிக்கமும் ஒருவன். விடியற்காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/20&oldid=616743" இருந்து மீள்விக்கப்பட்டது