பக்கம்:அமிர்தம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. தன் தந்தை தன் மீது காட்டிய அன்பைத் திரு ம் பவும்: எண்ணும்போதெல்லாம் அவள் மனம் கருகிச் சாம்பலாகி விடுவதுபோன்ற உணர்வு எழ ஆரம்பித்தது. இறுதியில் அவள் தகப்பன் விட்டுச் சென்ற பணத்தையும் பங்கிட்டுக் கொள்ளச் சொந்தமுறை கொண்டாடிக்கொண்டு வந்தார்கள் சிலர். கொஞ்சமிருந்த பணத்தையும் பறிகொண்டுவிட்டது அக்கும்பல். பாவம், பூங்கொடியின் எதிர்கால வாழ்வு?

தனி மாமானுள் பூங்கொடி. கடவுளின் கருணைக் கண்கள் தன்மீது விழாதா என எங்கித் துவண்டாள். அந்தச் சமயம்தான் அவளுக்குச் சிறிது கிம்மதி ஏற்பட்டது, அந்தச் செய்தியைக் கேட்டதும்,

பக்கத்து ஊர் மாடசாமிக் கோனர் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டார். அவரது குடும்ப விளக்கு அணையப்போகும் தருணத்தில், சுடரைத் தாண்டி விட்டுப் பிரகாசமெய்தச் செய்தவர் பூங்கொடியின் தந்தை தான. -

நம் குடும்பத்தைக் கைதாக்கிவிட்டு முன்னுக்குக் கொண்டுவந்த அந்தப் புண்ணியவானுடைய ப்ெண் அனுதா வான கிலேயில் தெருவில் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டு. காம் கவனியாதிருந்தால் ஊரில் என்ன பேசிக்கொள்வார் கள் ? என்ற அந்த ஊரின் வசைச் சொல்லிற்காக அவளை அங்கு அழைத்துக்கொண்டார். w •.

அவருக்கும் ஒரு பெண் இருந்தாள். பாஞ்சாலி என்று பெயர். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயது. ஆனல், அ ழ கில் பாஞ்சாலி எவ்விதத்திலும் பூங்கொடிக்கு ஈடாகவே முடியாது. அவ்வளவு அழகி பூங்கொடி. இருந்து என்ன செய்வது ? அதுதான் அவளது அழகிற்கு வறுமை திசையிட்டுவிட்டதே?

பாஞ்சாலி வீட்டு வேலை ஒன்றும் செய்யமாட்டாள். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு அசை

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/72&oldid=616854" இருந்து மீள்விக்கப்பட்டது