பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவழ்தல்


இருமனக் கனவில் வந்து
தவழ்கனை: எண்ணப் பாலை
அருந்தினை அழகை யுண்டிங்
கரும்பினை; பத்துத் திங்கள்
இருட்கடல் கடந்து வந்தாய் !
இன்பத்தை என்ன சொல்வேன்?
இருந்தமிழ்த் தேனே! வானே!
என்னிடம் தவழ்ந்து வாராய்!

9