இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவளும் நானும் குமுதமலர்க் கண்விழிக்கும் குளிர் நிலாவிலே அமுதமொழி பேசிடுவோம் அவளும் நானுமாய்! கமுகமரச் சோலையிலே முல்லைக் காவிலே காதலின்பம் சேர்த்திடுவோம் கண்ணிமைப் பிலே! குமுறுமிடி கொட்டுமழைக் கோலஞ் செய்யினும் கூடுமெங்கள் எண்ணம் சற்றும் குறைந்ததே இல்லை! திமுதிமுக்க சேனை பல சேர்ந்துவந் தாலும் தேனிதழின் சுவைமடுக்கா திருந்தோ மென்றில்லை! வறுமைசூழும் வையத்திலே வாடினோ மில்லை! வகையறியா துலகு வையும் கோபித்தோ மில்லை!' நறுமணமும் மலருமானோம் நாங்கள் வாழ்விலே! நஞ்செனினும் ஒருவருண்ண நாடினோ மில்லை! சிறுகுடிசை ஒழுகுமது எனினும்எங்கட்கு தேக்குமின்பக் கோட்டைய தைப் போன்றுவே றில்லை! உறுதியான காதலிலே பிணைந்துவிட் டோமால்! உலகத்துன்பம் எதுவும்எம்மை வருத்துவ தில்லை! 23