உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டேன் வானில்முழு மதியைக் கண்டேன் வனத்தில்ஒரு பெண்ணைக் கண்டேன் வானமுழு மதியைப்போலே-அந்த மங்கைமுகம் இலங்கக் கண்டேன்! கோவைப்பழம் கொடியில் கண்டேன் குடிசைமுன்னே அவளைக் கண்டேன் கோவைப்பழ நிறத்தைப்போலே-அந்தக் குமரி நறும் உதட்டைக் கண்டேன்! சோலையிலே தென்னை கண்டேன் தோட்டத்திலே அவளைக் கண்டேன் சோலை தென்னம் பாளைபோலே -அந்தச் சுந்தரியாள் சிரிக்கக் கண்டேன்! மலைமேலே தேனைக் கண்டேன் மலையடியில் அவளைக் கண்டேன் மலைத்தேனின் இனிப்பைபோலே -அந்த மாதரசி பேசக் கண்டேன் தாழையிலே மலரைக் கண்டேன் சடைபோட்ட அவளைக் கண்டேன் தாழைமலர் பறித்துத் தாரேன்- நல்ல தையலே நீ வாடி யென்றேன்! கோடையிடி இடிக்கக் கண்டேன் கொடியமின்னல் வீசக்கண்டேன் கோடையிடி மின்னலெல்லாம்-அவளின் கோபமெனக் கண்டுகொண்டேன்! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/27&oldid=1744165" இலிருந்து மீள்விக்கப்பட்டது