பெண்ணுயர்வு பேணுவோர்க்கு வாழ்த்துக் கூறுவோம்!- உண்மை பேசுகின்ற பேர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம்!- நாட்டை கண்ணிமைபோல் காப்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! - கல்வி கற்றுவாழச் செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! கோபுரத்தைக் குறைசொல்லும் குட்டை மனத்தார் - வெறும் குப்பை மேட்டைக் கோபுரமாய்ச் சொல்லும் குணத்தார்!-மிக ஆபத்தான ஆட்களாகும் அக்கூட் டத்தார் - நாட்டில் அற்றொழியச் செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்! வான்வெளியும் ஆழ்கடலும் கைவச மாக்கி - மக்கள் வாழ்வதற்கு ஏற்றவளம் தன்னைப் பெருக்கி - நாட்டில் தேனும், பசும்பாலும், நஞ்சை புஞ்சைக ளெல்லாம் - தேங்கச் செய்திடும் நல்லாட்சிவர - வாழ்த்துக் கூறுவோம்! மன்னுதமிழ் ஆட்சிகாணக் காலம் முழுதும் -உடல் நொந்தழியப் பாடுபடும் கூட்டத்தார் என்றும்-இந்த மண்ணின்மிசை திண்ணியராய் - வாழ்ந்திட என்றே - தினம் வாயார வாழ்த்துரைத்து சேவித்து நிற்போம்! 74
பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/77
Appearance