உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொத்தப் பசு! பழையனூர்ப் பண்ணையில் விவசாயக் கூலியாய் பக்கிரியெனும் ஏழை வேலை பார்த்தான்! மழைவெயில் என்றுமே பாரா துழைத்ததால் முதலாளி அவனிடம் அன்பு வைத்தார் ! இளமை முறுக்கிலே இருந்தநம் பக்கிரி அழகி ஒருத்திமேல் ஆசை வைத்தான்! எளிதில் அவர்களின் திருமணம் முடிந்தது இருவரும் ஜோடியாய் வேலை பார்த்தார்! அவனுக் கிருபடி அவளுக் கொருபடி அன்றாடக் கூலி நெல் பண்ணையிலே கவலைப் படாமலே கிடைத்ததைக் கொண்டுமே குடும்பம் நடத்தினர் இருவருமே! ஆண்டுக்கு ஒன்றென அடுக்கடுக் காகவே ஆண்டவன் பிள்ளையை அளித்து வந்தான் ! மூன்று படிநெல்லில் குடும்பம் நடத்திட முடியாமல் இருவரும் தொல்லைப் பட்டார் ! பக்கிரிமேல் வைத்த அன்பினால் பழையனூர் பண்ணை முதலாளி இரக்கப் பட்டு மிக்கஇ ளைத்திட்ட தொத்தப் பசுஒன்றை வழங்கினா ரினாமாக ஓர்தினத்தில்! எழுந்து நடந்திட முடியா நிலையிலே இருந்த பசுதன்னைப் பக்கி ரியும் விழுந்து விடாமலே தாங்கிப் பிடித்துத்தன் வீட்டுக்கு மெள்ள வே ஓட்டி வந்தான்! தாத்தப் பசுதன்னைக் கண்டதும் கத்தியை தீட்டினார் சேரியில் உள்ளவர்கள் ! ரெத்தம் பிடித்திடச் சட்டியைத் தூக்கியே தள்ளாடி வந்தது சின்னப் பிள்ளை ! 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/78&oldid=1744226" இலிருந்து மீள்விக்கப்பட்டது