உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரல் யெனக்கென ஓடியே வந்தது இன்னொரு பிள்ளை தான் பக்கிரிமுன்! நாறல் நிணங்களை தின்னும் கழுகுதான் நாடியே வந்த திறைச்சி யுண்ண! அறுத்திடப் போவதை அறியா நிலையிலே அசைபோட்டு நின்றது அந்தப் பசு தெருத்திண்ணை மீதிலே அமர்ந்து அழகியும் சிந்தனை செய்தா ளப்போ தினிலே! அறுத்திதை உண்பதால் இன்றைக்கு மக்களின் அரும்பசி யாற்றலாம், ஆனால் வீட்டினில் நிறுத்தியே பசுதன்னை வளர்த்திட்டால், கன்றீனும் "உசுப்பத்தி'க் குடும்பந்தான் உயர் வடையும். பால்தயிர் மோரென்று பசித்தழும் போதெல்லாம் பாலகர்க் கீயலாம் வேண மட்டும் கால்நடைச் செல்வந்தான் காப்பாற்றும் நம்மையே காப்போ மிப்பசு தனை யெனநினைத்தே பக்கிரி தன்னையும் பக்குவமாகவே பையனை விட்டுமே அழைத்தவளும் முக்கிய மானதோர் ரகசியம் போலவே வீட்டிற்குள் கூட்டிப்போய் சேதி சொன்னாள்! வெளியே வந்ததும் சேரியார் முன்னேதான் விளம்பினான் பக்கிரி விஷயத்தையும் களிகொண்ட சேரியார் வதனங்கள் வாடின கைசேதப் பட்டுமே வீடு சேர்ந்தார்! அழகியின் குழந்தைகள் அழுதன அவைகளை " அன்புடன் தேற்றி யவளும் சொன்னாள் : “இலகுதேன் போல் நல்ல சுவையுள்ள பால்தனை இந்தப்பசு தரும் விரைவினிலே பால்சோறு ஆக்கியே தருவேன் என்கண்களா பதறாமல் என்னுடன் வாருங்கள் நாம் சேல்துள்ளும் கழனிக்குச் சென்றுமே மாடுதான் தின்றிடப் புல்கொய்து வந்திடுவோம்' 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/79&oldid=1744227" இலிருந்து மீள்விக்கப்பட்டது