பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

 எல்லா அம்சமும் அழகாகப் பக்தியுடன், லயக் கட்டுப் பாட்டுடன், அதற்கு ஏற்ற ராகங்களுடன் மிகமிக ரசிக்கும் படி, பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இதற்கு உறுதுணையாக சகோதரி, அருட்பா இசையரசி, கலைமாமணி-குருவாயூர் பொன்னம்மாள் அவர்கள், வெகு பொருத்தமாகவும், சங்கீத வித்வான்கள் ஏற்க்கும் வகை யிலும் இசை அமைத்திருக்கின்ருர். குறிப்பாகப் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ராகமாகத் தேர்ந்தெடுத்து அமைத்திருக்கும் சிறப்பை இசையுலகம் போற்றிப் பாராட்ட வேண்டும். திருமதி. பொன்னம்மாள் அவர்களின் இசையமைப் பிற்குச் சுர-தாளக் குறிப்புக்கள் எழுதும் பணிக்கு உதவி புரிந்துள்ள, சங்கீத வித்வான் மேலக் காவேரி ஏ.ஆர். கண்ணன் அவர்களும் நமது பாராட்டுக்குரியவராவார். இசை உலகிற்கு அரும்பணியாற்றி வரும், சாகித்ய வித்வ சிரோண்மணி, அண்னர் திரு. கு சா.கி. அவர்களின், அருமையான தமிழிசைப் பாடல்களை இசைவாணர்கள் அனைவரும் இசையரங்குகளில் பெருவாரியாகப் பாடி அவர்களை ஊக்குவிக்கும் கடமை நம் அனைவரையும் சார்ந்தது என்பதை இசைவாணர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அண்னர் இசைப்பணி வாழ்க! அவர்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! அவர்கள் நாமம் வாழ்க! என்று சொல்லி அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று நீடுழி காலம் வாழ என் குருநாதர் சித்துார் ஐயா பரிபூரணத் திருவருளேயும் நான் வணங்கும் ஒம் கணபதி, சக்தி, முருகன் ஆகிய தெய்வங்களே யும் சதா பிரார்த்தித்த வண்ணமாக இருக்கின்றேன். - அன்புள்ள மதுரை சோமு 5–8–80.