பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவுரை கவிஞர் கு.சா.கி. அவர்கள் இன்னரென்று அறிமுகம் இல்லாத காலத்திலேயே,சுமார் முப்பது.ஆண்டுகளுக்குமுன், அவர்கள் எழுதிய இசையின்பம்’ என்னும் இசைப்பாடல் தொகுப்பு நூல் ஒன்று அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. அதில் உள்ள பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாகவும், ஜன ரஞ்சகமாகவும் இருந்ததால் அநேகம் பாடல்களுக்கு இசை அமைத்து எனது இசை நிகழ்ச்சிகளில் தவருமல் பாடுவது வழக்கம். கவிஞரின், அறிமுகமும், நட்பும், கிடைத்தபின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், அவர்கள் எழுதிய எத்தனையோ நூற்றுக் கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தும், இசை நிகழ்ச்சிகளில் பாடியும் வருகின்றேன். - அவைகளில் ஒரு நூறு பாடல்கள் மட்டும் தான் :அமுதத் தமிழிசை" என்னும் பெயரில், சுர-தாளக் குறிப்புக்களுடன் நூல் வடிவில் உருப்பெற்று, இன்று வெளியிடப்படுகிறது. இந்நூலுக்குப் பாராட்டுரைகள் வழங்கியிருக்கும், இசை உலக மாமேதைகள் எல்லோரும் என்னையும் பல படப்புகழ்ந்து, பெருமைப்படுத்தியிருப்பதை எண்ணுந் தோறும், என் உள்ளம் பூரிக்கின்றது, உடல் சிலிர்க்கின்றது. அந்தப் பெருந்தகையாளர்களின் பேருள்ளங்களுக் கெல்லாம் நன்றி! நன்றி! நன்றி! என்று கூறுவதைத் தவிர வேறென்ன கைமாறு செய்தல் கூடும்? - இசைத் துறையில் எனக்கு ஓரளவேனும் தகுதியிருக்கு மேயானல், அவை அனைத்திற்கும், எனது குருநாதர். சங்கித கலாநிதி, செம்பை பூரீ வைத்தியதை பாகவதர் அவர்களின் இசைப் பயிற்றுவிக்கும் ஆற்றலும், ஆசியும், நான்வழிபடும்