இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120 அமுத வல்லி __________________________________
எனக்கு முறை மாப்பிள்ளையாக இருக்கலாம். அதுக்காக, அந்த வீரமுத்துவுக்கு நான் வாக்கப்பட்டு அவனுக்கு முந்தானை விரிக்க வேணும்னு எங்காச்சம் விதி இருக்கா என்ன? நாட்டுக்கும் வீட்டுக்கும் பச்சையாத் துரோகம் செஞ்சுக் கிட்டு இருக்கிற அந்தச் சிகப்புப் பணக் காரக் குடிகாரன் வீரமுத்துவினாலே என்னா செஞ்சுப்புட எலுமாம்? துாவே-!
காறித்துப்பிக் கொண்டே தலையைத் தட்டி முடி போட்டவளாகத் தலை நிமிர்ந்தாள் பூங்காவனம்.
ராத்திரி வந்தது.
வந்த ராத்திரி சிவராத்திரியாகவே வாய்த்தது. கன்னி நிலவாகவே. மெய் உருகி மெய்ம்மறக்கின்றாள் பூங்காவனம் 'அன்பான அருமைச் சிங்கார வேலனே!- எம்புட்டு ஆசை மச்சானே! இந்தச் சமைஞ்ச குட்டி பூங்காவனம் வாழ்ந்தால், இனி உங் களோட தானாக்கும் வாழ்வாள், ஆத்தா அங்காளம்மை பேரிலே ஆணை வச்சுச் சொல்லிப்புட்ட சங் கதியாக்கும் இது!’ தேவ குமாரனாகத் தோன்றாமல் தோன்றுகிறான் சிங்காரவேலன்!
பாதிச் சாமம்,
கதவு தட்டப்படுகிறது.
பத்ரகாளியாகிறாள் பூங்காவனம். "என்னாங்கிறேன். ஆம்மான் மவன் காரவுகளே! ஓங்களுக்கு என்னா வேனும்? அதுவா, இல்லை இதுவா? ஊம்-சல்தியிலே செப்பிடுங்கங்கிறேன்!" நயமாக, விநய மாக வினவினாள்.’
அவள் கட்டிய இடங்களிலே, வீச்சரிவாளும், பட்டாக் கத்தியும் விதியென நமட்டுச் சிரிப்புக் சிரித்தன!