பக்கம்:அமுதவல்லி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 121 __________________________________

 “எனக்கு நீ தான் வேணுமாக்கும்!”
 ‘ஓ. அப்டிங்களா, அம்மான் மவன்காரவுகளே? பலே - ஒங்களுக்கு நான்தான் வேணும்னா, மூச்சுக் காட்டாமல் என்னை எடுத்துக்கிட வேண்டியது தானே? அப்பாலே, என்ன ரோசம் கெட்ட ரோசனை வேண்டிக் கிடக்குது? ஊ ம்-வாங்கங்கிறேன்... ஊம்...!”
  சிம்னி விளக்கு பெரிதாகவே எரிந்தது.
 மிருக வெறி கெட்டிமேளம் கொட்டப் பாய்ந்தான் சூரப்புலி வீரமுத்து.
 பூங்காவனம்  கண்கள்  சிவக்க ரத்தக்காட்டேரி ஆகிறாள்! காந்தி மகாத்மா மானசீகக் குருவாகி உபதேசம் செய்திருக்க வேண்டும்! மறு இமைப்பில், பூங்காவனத்தின் நகங்களும், பற்களும், மனிதத் தன்மையைப் பறிகொடுத்து நின்ற வீரமுத்துவிடம் விளையாடுகின்றன; விளையாட்டுக் காட்டுகின்றன
 ரத்தம் பீறிடுகிறது!
 வீரமுத்து வீரிட்டான்; "ஐயோ! வலி தாளல்லியே! எனக்கு மாப்புக் கொடுத்து என்னை விட்டுப் புடு புள்ளே! நன்னியோட நான் கண்காணாமல் ஒடிப்புடுவேன் !"
 சிங்காரவேலனின் புண்ணியத்திலே, வீரமுத்துவின் தலை தப்பியது.
 அன்றொரு நாள் அந்திக் கட்டில் ஊருணியில் குளித்து முழுகி மஞ்சள் ரவிக்கையையும் சிவப்பு நிறத்

அ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/123&oldid=1377288" இலிருந்து மீள்விக்கப்பட்டது