பக்கம்:அமுதவல்லி.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 அமுதவல்லி __________________________________

திலான உள்பாவாடையையும் காயப் போட்டு விட்டுச் சுங்கடிப் புடவையின் ஒரு தொங்கலைக் கருவேல மரத்தின் ஈசான்யமுடுக்கிலே முடிபோட்டு, மறு முனையை உடம்பைச் சுற்றிக் கொண்டு உலர வைத்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். எதிர் பாராத மாய விதியாகப் பேய் மழையும், சூறைக் காற்றும் கொட்டி முழக்கத் திக்கு முக்காடிப் போனாள் கன்னி; இடுப்புச் சேலையைக் காற்று கொள்ளை கொள்ளவே, தீமித்த வளாகத் துடித்த வேளை கெட்ட அவ்வேளையிலே, அங்கே செடி மறைவில் தேவ குமாரனாய்த் தோன் றின சிங்காரவேலன் கோவணத் துடன் நின்று, இடுப்பு வேட்டியைப் பூங்காவனத்தின் அழகு மேனியைக் குறிவைத்து வீசினான்!

  மானம் காத்த அந்த நல்ல புண்ணியவானையே இப்போது மனம் காக்கவும் நிர்ணயம் செய்து கொண்டாள் பூங்காவனம்.
  ஏழைமையும், ஏழைமையும் ஜோடி சேர்ந்தன.
  காலம் ஒரு புள்ளி மானுங்கூட!
  ஒரு நாள் அந்தி சந்திப்பொழுது; கம்மாய்க் கரை,
  எதிரில் பூங்காவனத்தின்  வீரமுத்து, சைக்கிளும் கையுமாக நின்றான்; உருமினான்:
  "ஏ புள்ளே ...! பொட்டுப் பொழுதுக்குக் கால் பாவி நின்னு, பொட்டிலே அறைகிறதாட்டம் தான் சொல்லப்போற இந்த நல்ல சமாச்சாரத்தைக் காதிலே வாங்கிக்கிட்டுப் பறிஞ்சுப்புடு நாட்டையும் வீட்டையும் ஒசத்தியாய் நினைச்சு, பணப்பசை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/124&oldid=1377339" இருந்து மீள்விக்கப்பட்டது