6. எல்லைச் சக்தி
‘விந்தையான விமரிசனம் ஆமாம்; உன் சிந்தை தடு மாறாமல் பார்த்துக்கொள். உண்மையிலேயே நீ என்னை விட ஆடலில் சிறந்தவளென்றால், நீ சற்று முன் பெண்ணுள் ஆணாகிச் சூளுரைத்தாயே, அந்தச் சூளுக்கு-சவாலுக்கு-சபதத்துக்கு வெற்றி சொல்ல வேண்டுமென்றால், நீ அந்தப் பார்வதி யாகிவிடக்கூடாது. நினைவில் கிறுக்கி வைத்துக் கொள். உன் பேதை மனம் கிறுக்காகிவிடப் போகிறது. உஷார்! சிவபிரானால் சிந்தையொடுக்கப்பட்ட சக்தி யாகி, தில்லையில் போய் எல்லைக்கல்
பதித்துவிடக் கூடாது!...
நடன உலகம் அப்பால் உன் பெயருக்குப் பாரதம் பாடி விடும்...அது மட்டுமா? பரணியும் புனைந்து விடுவார்கள். நிஜமாகவே உன் விமரிசனத்திலே விந்தை என்ற சொல்லை அடைமொழியாக்கி விடாதே! போட்டியிடப் போகிறவனே தன் எதிர்க்கட்சிக் காரிக்குப் பாடம் படித்துக் கொடுக்கிறானே வென்று எண்ணி அப்படி உன் மீன் விழிகள் துடிக்கின்றனவோ?-சொல், உன் கண்களிடம்; நான் நாளை உன்னைச் சந்திக்கிறேன்-நடன அரங்கிலே! அல்ல, அல்ல!... எல்லையிலாப் பெருவெளிக்கு எல்லை கிழித்துக் கிடக்கும் மயானத்திலே, சக்தியின் அகந்தை ஒடுக்கக் கால் மாறிக் குனிந்துக் குழை