பக்கம்:அமுதவல்லி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம் 137

‘எனக்கு இன்னம் கல்யாணமே ஆகலையே, கிழவியம்மா?’’

“ஆணப்புறம் ஏஞ் சொல்லுப் பலிக்கும். ஆமா, ஒம்பேரு என்னா, தாயி?”

பவளக்கொடி!’

‘அப்படின்னா, அர்ச்சுன மவராசா கெகடைச்சதும் எனக்குக் கண்ணாலச் சாப்பாடு போடோ ணும்!’’

“நிச்சயம் போடுவேன், பாட்டி!’

‘நானும் நிச்சயமாப் பொளைச்சுக் கெடப்பேன்!’

பிரிந்த ஒற்றையடிப் பாதைகள் அவர்களைப் பிரித்துவிட்டு வேடிக்கை பார்த்தன.

இரண்டு

அரிசிக் குறுணையை மடியிலிருந்து அவிழ்த்து முறத் தில் கொட்டினாள் செல்வாயி; வியர்வையைத் துடைத்தபின், சேலைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டாள்: மூச்சைக் கட்டிப் பிடித்து இழுத்த வண்ணம் முழங்காவிட்டு அமர்ந்தாள் : முறத்தைக் கையிலெடுத்துத் தட்டிப் புடைத் தாள்; கல்லும், நெல்லும் இந்தியப் பூகோளப்படத்தின் பாகிஸ்தானாம் ஆயின.

எரிந்தது தீ; கொதித்தது நீர் வெந்தது அரிசி: தப்பித்தவறிக் கிடந்தது தேங்காய்ச் சில் ஒன்று; சுற்றிச் சூழ்ந்திருந்த “பூரணம் மாயமானது; உப்பு, புளி, மிளகாய் ஒப்பந்தப் பத்திரத்தில் கைநாட்டுச்

அ-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/139&oldid=1376571" இலிருந்து மீள்விக்கப்பட்டது