பக்கம்:அமுதவல்லி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அமுதவல்லி


 அங்கே இருக்கு; அம்புட்டுத்தான்! எல்லாத்தையும் ஒரு முட்டாச் செலவு செஞ்சிட்டா அப்பாலே என்னா செய்யுறது, முருகா?’’

‘மரம் வச்ச மகராசன் தண்ணி ஊத்த மாட்டானா? ... உடம்பை அலட்டிக்காம இதை முதலிலே குடி, அக்கா.

‘ம்'- உந்திக் கமலத்திலிருந்து புறப்பட்டது!

நான்கு

தாமரைக் குளம் குறுஞ்சிரிப்பை உதிர்க்கத் தொடங்கியது.

“குடுகுடு கிழவி’ குறு குறு வென நடை பயின்றாள்; காளி ஆத்தாள் வழி மறித்தாள்: தேடி வந்த தெய்வத்தை நாடிச் சென்று கை தொழுதாள்; செல்லாயியின் பார்வையைக் கண்ணீர் மறைத்தது. “ஆமா, அந்தத் தம்பி சொன்னது நூத்திலே ஒரு சேதி தான்; அ ப ய ஞ் சமயத்துக்கிண்ணு தானே வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி காசு சேத்துக் குடுத்து வச்சிருக்கேன்; இதை விட வேறே கெட்ட வேளை வேணும்? ...

இருபத்தேழு ரூபாய் அவள் முன் எடுத்து வைத்தாள் உருவில் காற்றில் அழகு காட்டிப் பறந்தது: மறைந்தது. சார் ஐயர் கடைப் பட்சணங்கள் தோன்றின. ஆடு இறைச்சி, நண்டு, வெளவால், மீன் முதலியனவும் நாக்கில் நீர் ஊறச்செய்தன: மாற்றுப் புடவை சொக்குப் பொடி தூவத் தவறவில்லை. துளைத்தெடுத்த இருமலைக் கூட ஒரு பொருட்டெனக் கருதாதவளாய் வழி மிதித்து விழி பதித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/144&oldid=1376623" இலிருந்து மீள்விக்கப்பட்டது