பக்கம்:அமுதவல்லி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அமுதவல்லி


 “என்னா தம்பி, புதுக் கதையாப் படிக்கிறே?”

‘ஏன், பூராவும் தேவைங்கிறீயாக்கும், பெரியம்மாயி?

“ஆமா, ஆமா..!”

‘அதான் ஏலாது!’

ஏனிங்கிறேன்?”

“நீ திடுதிப்னு வாயைப் பொளந்துப் புட்டா அப்பாலே யாராம் ஒன்னைச் சுடுகாட்டுக்குத் துாக்கிக் கிட்டுப் போயி அடக்கம் செய்யிறதாம்?... ஒன் சொந்தக்காரன் நான் தானே செஞ்சாகணும்?... அதுக்கெல்லாம் செலவுக்கு வேணாமா?... இல்லே, தெரியாமத்தான் கேக்கறேன்!”

‘ஐயைய்யோ!... ஆத்தாடி!’

நல்லவேளை, பூமி வெடித்து அவளை விழுங்கி விடவில்லை!

மிளகாய்ப் பாத்திப் பணியில் கவனம் பதித்திருந்த கந்தசாமி, குனிந்த தலை நிமிராமல் இருந்தான்.

‘உசிரும் ஒடம்புமாத் திரியிறப்பத் தானே என் பணம் எனக்கு ஒதவோணும்?... நானு செத்துப் பூட்டா, அந்தக் கட்டையை அதோ அந்த எரியிற காளவாய்க்கு ஒணக்கையா வயசு காலத்தலே ஏதாச்சும் சாப்பிட்டுட்டுச் சாகறேன், தம்பி ஒனக்குக் கோடிப் புண்ணியம் கெடைக்கும். என்னோட காசு பணத்தை ஒத்தலையைச் சுத்தி, ஏம் பக்கமா வீசிப்போடு'-அழுதாள்! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/146&oldid=1376638" இலிருந்து மீள்விக்கப்பட்டது