பக்கம்:அமுதவல்லி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 அமுதவல்லி

வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!"என்றார். பேச்சின் ஒசை அடங்குவதற்குள், மேஜைமீது பிறந்த நாள் பரிசுகள் வைக்கப்படும் அரவம் புறப்படத் தொடங்கியது

புகழ் நடிகை குமாரி அமுதவல்லி மெல்ல எழுந் தாள் . மிக எளிய உடையில் திகழ்ந்தாள் அவள். சுற்றுமுற்றும் விழிகளைத் திசை திருப்பினாள். அதோ, ரமேஷ்! "என்னை அறிமுகப்படுத்தின டைரக்டர் ஸார்!"...அவளுடைய கனி இதழ்கள் முணுமுணுத்தன. இவர் தான் இந்திரஜித் நான் நடித்த 'சொல்லித் தெரிவதில்லை' படத்திலும் 'அம்பிகா ஏற்றி வைத்த திருவிளக்கு' என்ற சித்திரத்திலும் என்னோடு ஹீரோவாக நடித்தவர். நல்ல அழகர்!"..."அதோ, அவர் தான் வில்லன் வீரநாயகம்!...இலங்கைச் சீமைக்காரர். வில்லனாக படத்தில் நடித்தாலும் நல்லவர்'-அவள் பார்வையைச் சுற்றி விட்டாள். புதுப்படத் தயாரிப்பாளர் புதுமை வேத்தன் பட்டுச் சொக்காயும் பகட்டு மேனியும் துணை நிற்க, இளமுறுவல் பூவை மலரச் செய்தார்!...'ம்'

அமுதவல்லி ஒரு கணம் தலையைத் தாழ்த்தி நிமிர்ந்தாள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவன்பு மிக்க வணக்கமும் நன்றியும் உரியதாகும். என்னுடைய அன்பு அழைப்பிற்கு மதிப்பு வைத்து விருந்தில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை மறுபடியும் தெரிவித்துக் கொள்வதுடன், உங்களுடைய பரிசுகள் எதையும் இப்போதைக்கு நான் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையிலிருக்கிறேன் என்பதையும் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை தயவு செய்து மன்னித்தருள வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/16&oldid=1180462" இலிருந்து மீள்விக்கப்பட்டது