உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 அமுதவல்லி

பக்கத்திலே உள்ள பொம்பளைங்க சதா என்னை நையாண்டி பண் ணிக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ரோசம் தாங்கலிங்க.. ஆனதாலே சங்கதியை நீங்க திரும்பினதும் சொல்லிக்கிடலாம்னு பார்வதி அக் காளோட அந்தத் தாலியை அழிச்சு, எனக்குச் சங்கிலியை பண்ணும் படி பக்கத்துத் தெரு கணபதிப் பத்தர் கிட்டே மத்தியானம் ஒப்படைச் சிட்டேனுங்க, அத்தான்!”

தில்லையா இவ்வாறு பேசுகிறாள்? அவளா இப்படி நடந்திருக்கிறாள்?

சோமையா தன்னை மறந்தான், அடி பாவி! இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லாத ஒரு செயலைச் செய்யுறத்துக்கு உனக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ? நீ பெண்ணா? இல்லை. இல்லவே இல்லை! நீ பாழும் பேய்! அதனாலே தான், என் தெய்வத்தோட ஞாபகச் சின்னத்தை அழிச்சுப்பிட துணிஞ்சிட்டே நல்ல வளாட்டம் நடிச்சிருக்கே இல் லாட்டி, தாயில்லாப் பிள்ளையான என் மகன் பாபுவை நீ கைநீட்டி அடிச்சிருப்பியா?. பாவி நீ!...” என்று கூச்சல் போட்டான். மறுகணம், தில்லை நாயகியின் நீண்ட கூந்தலைப் பற்றி இழுத்து, மூர்த்தண்யமான ஓர் அசுர வெறியோடு அவளை கன்னா பின்னாவென்றும் தாறுமாறாகவும் அடித்து நொறுக்கிவிட்டான் அவன்!.

கடம்பா!....

பொங்கிக் கொதித்தும், கொதித்துப் பொங்கியும் வீறு பூண்டு முழங்கும் பால், தீண்டிய நாகம் அடங்கி ஓய்கிற மாதிரி தன்னைப் போல ஒடுங்கி விடும் என்பார்களே?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/172&oldid=1376676" இலிருந்து மீள்விக்கப்பட்டது