பக்கம்:அமுதவல்லி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 171

தில்லை நாயகி வைரமாக, அடித்து வைத்த சிலையாய் அப்படியே நின்று கொண்டிருந்தான்!

திடீரென்று விம்மல் ஒலி, அங்கே விரவிப் பரவிக் கிடந்த பயங்கரமான நல்ல பூமியின் அதீத அமைதியைப் பிளந்து வீசியது.

யார் அழுவதாம்?

தில்லையா?

ஊஹீம்!- தில்லை ஏன் அழப்போகிறாள்?

"அ.. ப்.. பா!"

வாண்டுப்பயல் பாபு அலறினான்.

சோமையா முன் மயிர்க்கொத்து கண்ணை மறைக்க ஏறிட்டு விழிகளைப் பிதுக்கினான். பாபு!” என்று விம்மிப்புடைத்து அவனை வாரியெடுக்கத் தாவினான்.

பாபு திமிறி விட்டான்.

ஐந்தறைப்பெட்டி முறுக்குகள் பறந்தன.

“அம்மா என்னை அடிச்சுதா? எப்போ? யார் சொன்னது?"

பாபு வீரிட்டான்,

“ஆ...!”

சோமையா தவித்தான். வழிந்தோடியது வேர்வையா? இல்லை சுடுநீரா?... அவன் பார்வை தாழ, தலையை நிமிர்த்தப் பலமின்றித் தடுமாறினான். நெஞ்சை வளைத்துச் சாடிக்கொண்டிருந்த சாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/173&oldid=1378231" இலிருந்து மீள்விக்கப்பட்டது