பக்கம்:அமுதவல்லி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 173

வும் ரகசியமாகவும் என்னைப் பரீட்சை பண்ணிப் பார்த்துக்கிடாமல் இருந்திருக்க முடியாது! அந்த அந்தரங்கத்தோட சத்திய தருமம் உங்களுடைய மனசுக்கும் மனச்சாட்சிக்கும் மட்டிலும் தான் புரிஞ்சிருக்கும்; விளங்கியும் இருக்கும்... ஊம். டீச்சருக்கு மாணவியே துணிஞ்சு பரீட்சை வைக்கிற ஒரு அதிசயக் கூத்து ஏன் இந்தக் கலி காலத்திலே நடக்கக் கூடாதாம்? நடக்க முடியாதாம்?... நான் அப்படிவொரு பரீட்சையை உங்களுக்கு வச்சு பார்த்தேன்!. நீங்க...?"- அவள் வாரி வழங்கிய சிரிப்புக்கு முன்னே விதியின் சிரிப்பு என்ன செய்து விட முடியும்?

'நான் தோற்றுப் போயிட்டேன்! ...ஐயோ முருகா!'

தில்லை தன் நாதனை அழகாகவும் அன்பாகவும் ஊடுருவினாள்; பிறகு இதழ்களை ஒரு துடிப்புடன் விலக்கி விட்டாள்: அன்பு வெற்றி பெற்றுத் தான் தீர வேணும் என்கிறது ஒண்ணும் சட்டம் இல்லீங்களே?... அப்படி விதியும் இல்லீங்களே?. அன்பு தோற்று விடுவதும் இயல்பு தானுங்களே, அத்தான்?”

அந்த அன்பின் சாதுர்யம் அவனை மேலும் தூண்டில் போட்டு இழுத்து விட்டிருக்குமோ? தில்லை!’ என்று விம்மினான்; வெடித்தான்.

“தில்லை, உன்னை அந்தரங்க சுத்தியோடு புரிஞ்சுக்கிடுறதுக்குத் தவறிப் போயிட்ட நான் மெய்யாலுமே தோற்றுத்தான் போய்ட்டேன்! ஆனா நீ சொல்ற மாதிரி அன்பு தோற்றாலும்-அல்லது தோற்றுப் போயிட வேண்டிய விதியைக் கொண்டிருந்தாலும், அந்தத் தோல்வியேதான் என்னோட மனசுக்கு வெற்றியாக அமைய முடியும்; அப்பத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/175&oldid=1378274" இலிருந்து மீள்விக்கப்பட்டது