பக்கம்:அமுதவல்லி.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 அமுத வல்லி


   "ஆண்டவன் சாட்சியாக, என் பேரிலே உனக்கிருக்கும் உரிமை ஒருநாளும் பறிபோகாது!... உன் காய்ச்சலுக்குக் காரணம் புரிந்து விட்டது. தாராவை நாளைக்கே வேலையை விட்டு விலக்கிவிடுகிறேன். இனி திருப்தி தானே?..."
   இன்பக் கனவுகளின் அடிவாரத்திலே, வாணி ஆனந்தமாக நித்திரை வசப்பட்டுக் கிடந்தாள்.
   முகுந்தன், காலடியில் கிடந்த அந்த மோதிரத்தைத் தூர விட்டு வீசினான். 'தாரா' என்ற எழுத்துக்கள் சிரித்தன_விஷச் சிரிப்பு; போதைச் சிரிப்பு!
   காதலுக்கு இதயம் இல்லை.
   காதலுக்குக் கண் இல்லை.
   சுட்டிப்பயல் ஓடுவதைப் போல் இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் தன்னை மறந்து, தான் தாங்கிச் செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைப் பொறுப்புணர்ச்சியுடன் நினைந்து கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.
   ஆந்தைக் கண்களில் அழகா சொட்டும்? ஆனால், இருளின் கண்களில் அழகு சொட்டியது; வழிந்ததுதழலிலே தண்மை சிரிக்கும் பாங்கிலே.
   இரண்டாம் வகுப்புப் பெட்டியை அவனால் ரசிக்க முடியவில்லை. அருகில் அவள் இருந்திருக்க வேண்டாமா?-பதட்டப்பட்டு விடாதீர்கள், சுவாமிகளே! அவள் என்றால், அவனுக்கு முன்றானை போடும் பாக்கியம் பெற்றவள் -உரிமை பூண்டவள் ஆம். அவள்-அவளே தான்!-வாணி! நாளைத் திரும்பும்போது, இந்தப் பாழும் இருளில் கூட அவன் பூரண நிலவைத் தரிசிப்பான் அல்லவா ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/194&oldid=1377803" இருந்து மீள்விக்கப்பட்டது