பக்கம்:அமுதவல்லி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

205


 னான். கட்கத்தியிலிருந்து கைக்குத் தாவிய தாரை மீண்டும் இருப்புக்கு இடம் மாற்றினான அவன்.

அடித்துப் போட்டாற் போன்று அசதி வலுத்தது; அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தாள் செம்பவளம்.

அவன் முகத்தில் ஓரிடம் தரிசு வைக்காமல்

கண்ணீரின் தடயங்கள் தடம் காட்டின. ‘நானு கண்ணு முழிச்சடியுமே நீங்க ஒரே ஓட்டமா வந்து என் முன்னரிக்கே நின்னிங்க. அதுதொட்டு நீங்க கண்ணு கலங்கிக்கிட்டே இருக்கீங்க! இந்தப் பேதைக் கன்னிக்காவத் தானுங்களே! ஆமா, இம்மாந்தூரம் எம்பேரிலே பச்சாதாபப்படுகிற நீங்க யாரு? என்னைப் பத்தி இம்புட்டு அக்கரைப்படுற நீங்கதான் என் தெய்வமா?... சொல்லுங்க!...’ என்று ஓங்கிய குரலில் கேட்டாள் அவள்.

‘நானு...நானு மனுசன்! சாதாரணமான ஒரு ஆள்! நாலு பேரைப் போலவே குறையும் நெறையும் கொண்ட ஒரு ஆம்பளை நானு! என்னைக் காளியப்பன் அப்ப்டியின்னு அழைப்பாங்க! ஒம் பேரு?...’ என்று எதிர் வினா சொடுக்கினான் அவன். கண் களைத் துவாலை முண்டாசை உதறித் துடைத்துக் கொண்டான். பாகவதர் கிராப்பைக் கோதிவிட்டுக் கொண்டான். சொல்லுகிறேன்! ஒம்பேரு என்ன? என்னை நம்பு! ஒன்னை நம்புறவன் நானு! ஆனதாலே என்னை நம்புங்கிறேன்: ஒம் பேரு என்னை அடுத்து, மைத்த காக்கைக் குருவிக்குக்கூட தெரியாம கமுக்கமாய் பார்த்துக்கிடுவேன். நெஞ்சை ஒளிச்சு வஞ்சகமா? சும்மா சொல்லு!’ என்று உணர்ச்சிச் சுழிப்புடன் பேசிய அவன், அவளுடைய கைகளைப் பற்றிக் கெஞ்ச முனைந்து, அவளை நெருங்கிவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/207&oldid=1378158" இலிருந்து மீள்விக்கப்பட்டது