பக்கம்:அமுதவல்லி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலரும் நினைவுகள்


மாண்பு நிறைந்த மனிதப் பிறவியின் சோதனை மிகுந்த மனித வாழ்க்கையிலே, நித்த நித்தம் எத்தனை, எத்தனையோ கதைகள் நடக்கின்றன!— நடந்து காட்டுகின்றன அல்லவா?— எனவே தான், வாழ்க்கை ஒரு கதையாக ஆகிறது; ஆக்கப்படுகின்றது! - அதுபோலவே, கதையும் ஒரு வாழ்க்கை யாக ஆகிறது: ஆக்கப்படுகிறது! இந்நிலையிலே தான், வாழ்க்கை எனும் கதையும், கதை ஆகிய வாழ்க்கையும் படைப்பின் தத்துவமாக மட்டுமல்லாமல், படைப்பின் விதியாகவும் அமைந்துவிடுகிறது!

இப்படிப்பட்ட சித்திர விசித்திரமான படைப்பின் தத்துவத்தையும் படைப்பின் விதியையும் உணர்ந்து, அறிந்து தெரிந்து கொள்கின்ற எழுத்துக் கலைஞர்கள் இரண்டாவது பிரம்மாக்களாகவே மதிக்கப் படுகின்றார்கள்!

எழுத்தாளர்கள் பாக்கியவான்கள் !

உண்மைதான்! - நான் பாக்கியவான்! — இரண்டாவது பிரம்மாவாக ஆவதென்பது சாமானியப்பட்ட காரியமா என்ன? - ராஜயோகமான அடி நாட்களிலே, பொங்குவிரி காவிரியின் தாய் மடியிலே தவழ்ந்து கொண்டிருக்கின்ற திருச்சிராப்பள்ளியிலே, நான் பி. ஏ.,— இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், என்னுடைய முதல் கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/5&oldid=1027296" இலிருந்து மீள்விக்கப்பட்டது