பக்கம்:அமுதவல்லி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 அமுதவல்லி


மான சம்பத்துக்களுக்கும் நானே தான் ராஜா; உடைமையாளன் . இவைகளை நான் துச்சமென்று மதிப்பவன். ஆனால் நீ எனக்கு உயிர். உனது உயிர் எனக்கு உலகம். உன்னுடைய சந்தோஷமே எனக்கு கடமை. நான் படித்தவன். ஆகவே, பண்பும் இருக்கிறது. என்னை நீ நம்பவேண்டும். இந்த ஒரு லெட்டரை அடியில் கையொப்பம் இட்டிருக்கக்கூடிய என்னுடைய இந்தக் கடுதாசியைக் கொண்டே நீ என்னை பின்னால் மடக்கவும் மடக்கலாம், பார்த்தாயா? நானே உனக்கு வழியையும் காட்டுகிறேன். ஆக, என் மனசை நீ புரிந்து கொண்டதாக நான் உன்னிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால், உண்மையாகவே நான் ரொம்பவும் மகிழ்ச்சி கொள்வேன்.

   மாதவியைக் கண்டவுடன் கோவலன் எப்படி நினைத் திருப்பானோ, எனக்குத் தெரியாது, ஆனால் உன்னைப் பார்த்தவுடன் , பிறவிப் பயன் எடுத்ததன் தாத்பரியம் எனக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.
   மற்ற விவரங்களை நேருக்கு நேராகப் பேசுவது தான் சிலாக்கியம்.
                       இப்படிக்கு, 
                     மணிகண்டன்."
   மணிகண்டன் அத்துமீறிய குதுகலத்தோடு மோஹினியைச் சந்தித் தான். அவளை அவன் பார்த்தபோது, மஞ்சள் வெயில் மயங்கி வந்தது. அவளுடைய போதம் பூத்த போதை விழிகளின் கிறக்கத்தினால், அவனும் மயங்கித் தான் போனான். பிள்ளையாய்ப் பிறந்த எவனும் அவளுடைய அழகுக்கு அடிமையாகாமல் இருப்பானா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/66&oldid=1376442" இலிருந்து மீள்விக்கப்பட்டது